மஞ்சள்-காமாலை | | Tamil Best Beauty tips site | Laddu muttai மஞ்சள் காமாலை குணமாக சித்த மற்றும் பாட்டி வைத்தியம்

மஞ்சள் காமாலை குணமாக சித்த மற்றும் பாட்டி வைத்தியம்

1. கீழாநெல்லி செடி முழுவதும் அரைத்து மோரில் காலை, மாலை குடிக்க மஞ்சள் காமாலை நோய் குணமாகும். 2. தும்பை இலைகளை அரைத்து தலையில் பற்று போட்டு மோரில் கலந்து 3 நாட்கள் சாப்பிட மஞ்சள் காமாலை குணமாகும். 3. சுரைக்காய் பச்சடி செய்து சாப்பிட்டால் கண்குளிர்ச்சி பெறும். மஞ்சள் காமாலை நோய் குணமாகும். 4. கீழாநெல்லி, கரிசலாங்கன்னி இலை, தும்பை இலை சம அளவு கலந்து 10 நாள் சாப்பிட மஞ்சள் காமாலை குணமாகும். 5. வேப்பங்கொழுந்து இலையை நிழலில் உலர்த்தி, 1/2 பங்கு உப்பு, ஓமம் வறுத்து பொடி செய்து சேர்த்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை குணமாகும். 6. கையாந்தரை, தும்பை, அம்மான் பச்சரிசி, தேன் கலந்து சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும். 7. பழுத்த வாழைப்பழத்தின் தோல் மீது சுண்ணாம்பு தடவி இரவு முழுவதும் பனியில் வைத்து காலையில் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை 1 வாரத்தில் குணமாகும். 8. கீழாநெல்லி செடியை கழுவி சுத்தம் செய்து அப்படியே மைய அரைத்து மோருடன் கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை 2 நாளில் குணமாகும். 9. கரிசலாங்கண்ணி இலை, 9 மிளகு சேர்த்து அரைத்து காலை, மாலை தேனில் கலந்து சாப்பிட குணமாகும்.




kamala-orange-payangal

Tag : Fruit-facts |

1. தோலை உலர்த்தி ஓமம், இந்துப்பு, சுக்கு சேர்த்து பிடித்து பல்பொடியாக பயன்படுத்தினால் ஈறுகள் உறுதிபடுவதுடன் பற்கள் வெண்மையாகும் பல் நோய் வராது. 2. இப்பழச்சாறு தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் சொத்தைப் பல்லை குணமாகி பற்பூச்சை (எனாமலை) பாதுகாக்கிறது, மேலும் பல்வலி, ஈறுவீக்கம், ரத்தக் கசிவை குணமாகும். 3. இப்பழத்தின் வெண்ணிறத் தோல் நார்ச்சத்து நிரம்பியது. அது பழத்துடன் சேர்ந்து சாப்பிட்டால் உடலை தூய்மையாக்கி மலச்சிக்கலைப் போக்கும். 4. இப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் ரத்தத்தில் கொழுப்பு அளவை குறைக்கும். இதுபோல் தோல் நுரையீரல், மார்பகம் குறித்து பல்வேறு புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது. 5. தூக்கம் இல்லாமல் அவதிபடுபவர்கள் இரவு படுக்கைக்கு செல்லும் முன் ஆரஞ்சு பழச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும். 6. ஆரஞ்சு பழச்சாற்றை ஒரு மண்டல தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சத்தி அதிகரித்து உடல் பலமடையும். நரம்புகள் பலம் பெரும். 7. தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும் சிறுநீரிலும் வெளியேறும். இதனால் சருமம் பளபளப்புடன் நோயின் தாக்குதலின்றியும் இருக்கும். 8. இதேபோல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் மற்றும் சிறுநீரக கல் உருவாவதற்கான வாய்ப்பும் குறையும், இதயத்தின் சிறப்பாக செயல்படுத்த உதவும் பொட்டாசியம், தாது உப்பு இதில் அதிகமாக இருக்கிறது.
Laddu Muttai | 15-06-2020
aanmai-kuraivu-naatu-marunthu

Tag : aanmai |

பொதுவாக ஆண்மை குறைவிற்கு பெரும்பாலும் யாரும் மருத்துவமனைக்கு செல்வதில்லை . அப்படிப்பட்டவர்களுக்கான பதிவு இது. பின்வரும் மருந்துகள் அனைத்தும் உங்கள் பகுதியிலுள்ள நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வாங்கி உண்டு பயன்பெறுங்கள். 1. அஸ்வகந்தா பவுடர் - ஆண்குறி விறைப்பு தன்மைக்கு உதவுகிறது. 2. ஓரிதல்தாமரை - ஆண்மையை அதிகரிக்கும் தன்மையுடையது. 3. பூனைகாலி - விந்து அல்லது உயிரணுக்களை அதிகரிப்பதில் மிக்க வல்லது. 4. ஜாதிக்காய் - ஆண்குறியின் விறைப்பு தன்மையை அதிகரிக்கும் திறனுடையது. 5. நீர்முள்ளி விதை - விந்துவை கெட்டி பட வைக்கும் ஆற்றலுடையது. 6. தண்ணீர்விட்டான் கிழங்கு - ஆண்மையை அதிகரிக்க செய்யும்.
Laddu Muttai | 15-06-2020
aankuri-viraikka

Tag : aanmai |

ஆண்குறி விரைப்புதன்மைக்கு மருந்து 1. 10 அல்லது 15 நீர்முள்ளி வித்துக்களை எடுத்துக்கொண்டு இரவு தூங்குவதற்கு முன்பாக ஒரு செவ்வாழை பழத்தில் ஊசி இறக்குவதுபோல் பதித்து , மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவதன் மூலமாக ஆண்குறி விறைப்புத்தன்மை சார்ந்த அணைத்து பிரச்சனைகளும் குணமடையும். கண்டிப்பாக இதனை தொடர்ந்து 30 நாட்களாவது சாப்பிட்டு வர வேண்டும். நீர்முள்ளி வித்து அணைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். அப்புறம் என்ன நீங்க கொடி புடிசிட்டே திரியலாம். 2. உடனடியாக விறைப்பு தன்மை தெரிய இந்த சூரணத்தை சாப்பிடுங்கள். தேவையான பொருட்கள்: 1. ஜாதிக்காய் 2. அஸ்வகந்தா பவுடர் 3. ஓரிதல்தாமரை 4. பூனைகாலி 5. நீர்முள்ளி விதை 6. தண்ணீர்விட்டான் கிழங்கு இவைகள் அனைத்தும் அருகிலுள்ள நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். மேலுள்ள அனைத்தையும் பவுடர் செய்து வைத்துக்கொள்ளவும். பின்பு தேனில் கட்டியாக பதம் வரும் வரை குழைத்து , தினமும் காலை மற்றும் மாலை கோலிக்குண்டு அளவிற்கு சாப்பிட்டு வருவதன் மூலமாக உடனடியாக விறைப்பு தன்மையில் மாற்றம் தெரியும். விந்து உற்பத்தியை அதிகரிக்க செய்ய வேண்டியவை: தேவையான பொருட்கள்: 1. கசகசா - 10 கிராம் 2. பால் 3. நீர்முள்ளி - 30 கிராம் 4. பாதாம்பருப்பு - 10 கிராம் இவற்றை தேவையான அளவு எடுத்துக்கொண்டு 1 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். பின்பு அவற்றை எடுத்து பாலுடன் சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.
Laddu Muttai | 15-06-2020
thookathil-vinthu-veliyagamal-irukka

Tag : aanmai |

உடலில் உள்ள அமிலங்களை சீராக வைப்பதன் மூலமாக தூக்கத்தில் விந்து வெளிப்படுவதை நாம் நிறுத்த முடியும். இந்த லேகியத்தை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் தூக்கத்தில் விந்து வெளிப்படுவதை அறவே தவிர்க்க முடியும். 1. ஏலக்காய் 50 கிராம் 2. அமுக்கரா 50 கிராம் 3. பாதாம் பிசின் 50 கிராம் 4. உளுந்து 100 கிராம் 5. எள் 100 கிராம் 6. கசகசா 50 கிராம் 7. சுக்கு மிளகு திப்பிலி தலா 50 கிராம் 8. நெல்லிக்கணி 50 கிராம் 9. பூசணி விதை 50 கிராம் 10. துவரம் பருப்பு நூறு கிராம் 11. பாதாம் பிஸ்தா மற்றும் முந்திரி தலா 50 கிராம் இவற்றையெல்லாம் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு பின்பு தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பேரிச்சம் பழம் 100 கிராம் மற்றும் கருப்பு திராட்சை 100 கிராம் எடுத்துக் கொண்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். 2 கிலோ தேனை நன்றாக கொதிக்கவைத்து நுரை அடங்கிய பின் அரைத்து வைத்திருக்கும் திராட்சை மற்றும் பேரீச்சம் பழத்தை கலந்து நாம் தூள் செய்து வைத்துள்ளவற்றையும் அதில் கொட்டி வைக்க வேண்டும். இதனை தினமும் இரவு தூங்குவதற்கு முன்பாக 5 கிராம் அளவிற்கு சாப்பிட்டுவர தூக்கத்தில் விந்து வெளிப்படும் பிரச்சனையானது அறவே நீங்கும் மேலும் விந்து கெட்டிப்படும் ஆண்மையும் பெருகும். குறிப்பு: மேலே குறிப்பிட்ட பொருட்களை உங்களின் தேவைக்கு ஏற்ப குறைத்துக் கொண்டு இதனை உங்களால் தயாரிக்க முடியும்.
Laddu Muttai | 15-06-2020
thookathil-vinthu-velipaduthal

Tag : aanmai |

தூக்கத்தில் விந்து வெளியானால் என்ன செய்ய வேண்டும் தூக்கத்தில் விந்து வெளிப்படுதல் என்பது இயற்கையான நிகழ்வு பயம் கொள்ள வேண்டாம். இப்பொழுதும் தூக்கத்தில் விந்து வெளியானவுடன் தூக்கம் கலைந்து எழுந்து விடுவீர்கள். எழுந்தவுடன் சென்று சிறுநீர் கழித்துவிட்டு பின்பு உங்கள் ஆணுறுப்பை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பின்பு சுத்தமான துணி ஒன்றை எடுத்துக் கொண்டு நன்கு உலர்வாக துடைத்துக் கொள்ளவேண்டும். கழுவாமல் உண்பதன் மூலம் இன்ஃபெக்ஷன் வர நேரிடும். அல்லது கழுவிவிட்டு ஈரமாக விடுவதன் மூலமாகவும் இன்ஸ்பெக்சன் வரலாம். எனது கழுவிய பின்பு உலர்வாக வைத்துக்கொள்வது என்பது மிக முக்கியமான ஒன்று. இயற்கையாக சில விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் தூக்கத்தில் விந்து வெளியேறுவதை தவிர்க்கலாம்... (உணவு மூலம் சரி செய்ய அடுத்த பதிவினை படிக்கவும்) 1. காலை 15 நிமிடம் உடற்பயிற்சி செய்வது. 2. தூங்குவதற்கு முன்பாக குறைந்தது 2 அல்லது 3 மணி நேரத்திற்கு முன்பாக செக்ஸ் படம் பார்ப்பது கதைகளைப் படிப்பது காம எண்ணங்களில் வைப்பது போன்றவற்றை தவிர்க்கவும். 3. நல்ல காற்றோட்டமான அறையில் தூங்க வேண்டும். 4. இரவு நேரங்களில் எண்ணெய் கொழுப்புள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது. 5. தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக உணவினை சாப்பிட்டு விடுங்கள். கழுத்துவரை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. 6. உடல் உழைப்பு அதிகம் இல்லாத வேலை செய்பவராக இருப்பின் மாலை நேரங்களில் குறைந்தது அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்தல் நன்று. 7. தொடர்ந்து வெளியேறும் பட்சத்தில் சேராத உணவு வகைகளை குறித்து வைத்துக்கொண்டு அவற்றை சாப்பிடாமல் தவிர்ப்பதன் மூலம் இரவு நேரங்களில் தினமும் வெளிப்படுவதை தவிர்க்கலாம். 8. மாதம் ஒரு முறையாவது எண்ணை குளியல் போடுங்கள். இது உடல் சூட்டைத் தணித்து நம்மை சீராக வைக்கும்.
Laddu Muttai | 15-06-2020
aanmai-kuraivu

Tag : aanmai |

தூக்கத்தில் கனவு ஏற்படுவது மூலமாக விந்து வெளிப்படுவது என்பது மிகவும் சாதாரணமான ஒரு விஷயமாகும். பல ஆண்கள் இதை ஒரு நோயாகவும் தங்களுக்கு உள்ள குறைபாடவும் கருதி வருகின்றனர். இந்த விஷத்தை வைத்து சிலர் பணம் பார்த்தும் வருகின்றனர். அனால் உண்மையில் ஆணின் ஆணுறுப்பு மற்றும் விதைப்பை சிறப்பாக செயல்படுவதின் அறிகுறிகள் தான் இவை . அளவுக்கு அதிகமாக உடலானது வெப்பமடையும் பொழுது வியர்வையை வெளியேற்றி உடலை குளிர்ச்சியடைய செய்யும். அதே போல் தான் விந்து வெளிப்படும் நிகழ்வும். நாம் உடல் உறவு செய்யாமல் இருக்கும் பொழுது, உணர்ச்சி கட்டுக்குள் இருக்க விந்துவை வெளியேற்றி நமது உடலை ஆரோக்கியமாக இருக்க வழி வகை செய்கிறது. பல ஆண்களுக்கு இதை பற்றிய சரியான புரிதல் இல்லாத காரணத்தினால் சிலர் அந்த பயத்தை பயன்படுத்தி பணம் சம்பாதித்து வருகின்றனர் . ஆகையால் தூக்கத்தில் விந்து வெளிவருவது இயற்கையான மற்றும் ஆரோக்கியமான நிகழ்வு என்பதை நாம் அறிய வேண்டும். தூக்கத்தில் வெளியான அடுத்த 3 நாட்களில் விதைப்பை விந்துவை முழுமையாக சுரக்க செய்யும். இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து பயன்பெற செய்யுங்கள்.
Laddu Muttai | 15-06-2020
vaazhai-pazham-maruthuva-gunangal

Tag : Fruit-facts |

1. மலச்சிக்கல் வாழைப்பழம் மலச்சிக்கலை சரிசெய்யும் என்பது நம்மில் பலரும் அறிந்த ஒன்றே மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் , வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் குடலின் இயக்கமானது சீராக இயங்க ஆரமிக்கும் , எனவே மலச்சிக்கல் பிரச்சனையானது விரைவாக சரியாகும். 2. ஆற்றல் பெருக்கு வாழைப்பழத்தில் சுக்ரோஸ் , குளுக்கோஸ், மற்றும் ஃபுருக்டோஸ் ஆகிய சத்துக்களானது மனித உடலுக்கு உடனடியாக ஆற்றலை பெருக்கும் சக்தி கொண்டது. 3. மூளை செயல்பாடு வாழைப்பழத்தில் பொட்டாசயிம் சத்து அதிக அளவில் உள்ளது , இதனை சாப்பிடுவதன் மூலம் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும். ஆகையால் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வருவதால் அன்றைய நாள் புத்துணர்ச்சியுடன் இயங்கும். 4. சிறுநீரக பிரச்சனை: வாழைப்பழத்தில் தேவைக்கு ஏற்ப புரோட்டீன் மற்றும் உப்பு உள்ளது. இவை சிறுநீரகத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை சரிசெய்யும் தன்மை உடையது. மூன்று நாட்கள் இடைவிடாது ஒரு நாளுக்கு 10 பழங்கள் வீதம் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும். 5. எடை குறைக்க: எடை குறைக்கும் எண்ணம் கொண்டவர்கள் டயட்டில் அன்றாடம் வாழைப்பழத்தை சேர்த்துக் கொள்வதன் மூலமாக எடைக்குறைப்பில் நல்ல பலனைப் பெறலாம். 6. இதய நோய்: உடலிலுள்ள நீர் செல்களை சீராக வைத்து ரத்த அழுத்தத்தை குறைப்பதன் மூலம் ரத்த அழுத்தம் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதை தடுக்கும்.தினசரி வாழைப்பழம் சாப்பிட்டு வர பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு என்பது மிகவும் குறைவு. 7. ரத்த சோகை: வாழைப்பழத்தில் அதிக அளவு இரும்பு சத்துக்கள் உள்ளது. எனவே தினசரி வாழைப்பழம் சாப்பிட்டு வர ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் ரத்த சோகை நீங்கும். 8. வயிற்றுக்கடுப்பு: நன்கு மசித்த வாழைப்பழத்தில் சிறிதளவு உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வர வயிற்று கடுப்பு உடனடியாக நிற்கும். 9.குடல் கோளாறு: தினமும் நன்கு கனிந்த வாழைப்பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலமாக குடலில் ஏற்படும் கோளாறுகள் நீங்கிவிடும். மேலும் குடலில் உள்ள புண்கள் குணமாகும். பிறகு செரிமான இயக்கம் இயல்பு நிலை திரும்பும்.
Laddu Muttai | 12-06-2020