1. மணித்தக்காளி கீரை , மணித்தக்காளி காய் மற்றும் பழங்களும் எண்ணற்ற மருத்துவப் பயன்களைக் கொண்டது. 2. பச்சைமணி தக்காளியை சமைத்து சாப்பிட்டுவர உள்காய்ச்சல் கண்ணெரிச்சல் மற்றும் கபவாத தொல்லைகளை சரிசெய்யும். முக்கியமாக மேனியை அழகுபடுத்தும் பண்பானது பச்சை மணி தக்காளிக்கு உண்டு. 3. கருப்பு மணி தக்காளியை சமைத்து உண்டுவர உடல் வெப்பத்தினை வெகுவாகக் குறைக்கும் ஜீரணக் கோளாறுகளை சரி செய்யும் பண்பானது கருப்பு மணி தக்காளிக்கு உண்டு. மேலும் உடம்பில் பித்தம் அதிகமாக சேர்வதை கட்டுப்படுத்தும். 4. மணித்தக்காளி கீரையை கூட்டு செய்து சாப்பிட்டு வர வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் நீங்கும். மார்புச் சளியை குறைப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. 5. சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்குவதற்கு , மணிதக்காளியின் சாற்றை தினமும் இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். 6. மணித்தக்காளியை வற்றல் செய்து சாப்பிட்டுவந்தால் மலத்தை இளக்கும். மேலும் இதனை நெய்யில் பொரித்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். உடம்பிலுள்ள கோழையை வெளியேறும்.