அவரைக்காயை பிஞ்சாக இருக்கும் பொழுது தோல் பகுதியுடன் சேர்த்து உண்ண தகுந்தது, முற்ற விட்டாள் விதைகள் மட்டுமே மிஞ்சும். அவரையில் இரும்பு சத்தானது அதிகமாக காணப்படுகிறது எனவே கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு சிறந்த உணவாக அமையும். அவரை இலைச் சாற்றுடன் சிறிது சுண்ணாம்பு மற்றும் ஆமணக்கு எண்ணெய் கலந்து குழைத்து காயத்தில் பூசிவர உடலில் ஏற்பட்ட புண் ஆறும். இவற்றுடன் கற்கண்டு பொடி சேர்த்து கொட்டைப் பாக்கு அளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். வாதம் சம்பந்தமான நோயாளிகளுக்கும் கண்களில் கோளாறு உள்ளவர்களுக்கும் பிஞ்சு அவரைக்காய் சமையல் செய்து கொடுக்க நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அவரையே தொடர்ந்து சாப்பிட்டு வர கபம், வாதம், பித்தம் சம்பந்தமான நோய்கள் அறவே நீங்கும்