1. நாட்டுவாழைப்பழம் நன்றாக பழுத்தது ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து முகம் கழுவி வர முகம் பளபளப்பாகும். 2. பப்பாளி பழத்தை மசித்து முகம், கழுத்து, கைகளில் பூசி 12 பணி நேரம் ஊறவைத்து பின் முகம் கழுவ முக அழகு கூடும். 3. முகம் பளபளப்புடன் வழவழப்பாக; இரவு புல்லின் மீது மெல்லிய துணியை விரித்து வைக்கவும். 4. அதிகாலையில் துணியை பிழிந்து முகத்தில் தடவி வர முகம் பளபளப்பாகும். 5. ஆவாரம்பூ, பச்சை பயிறு சேர்த்து பொடியாக்கி சோப்புக்கு பதிலாக குளிக்கும் போது உடம்பு முழுவதும் பூசி முகத்திற்கு பூசி குளித்து வர குறை நீங்கி முகம் பளபளக்கும். 6. பப்பாளி பழ கூழ் 50 கிராம், அருகம்புல் சாறு 10 கிராம், பன்னீர் 5 சொட்டு கலந்து தினசரி முகத்தில் தடவி 1 மணி நேரம் கழுவி வந்தால் முகம் நிறம் உண்டாகும். 7. காலையில் எழுந்ததும் அவரை இலைசாறை முகத்தில் தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்து பின் குளித்தால் முகம் பளபளப்பு அடையும்.