நம் முன்னோர்கள் முகத்தை பளபளப்பாக வைப்பதற்கு அன்றாடம் வீட்டில் உபயோகிக்கும் பொருட்கள் மேலும் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உபயோகித்தனர். அப்படி வீட்டில் உள்ள பொருட்களை வைத்து முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: 1. பால் பவுடர் 2. கடலைமாவு 3. சிறிதளவு பன்னீர் 3. சந்தனம் பவுடர் செய்தது 4. சிறிது மஞ்சள் 5. புதினா சாறு இவை அனைத்தையும் சம அளவில் எடுத்துக்கொண்டு புதினா சாறு மற்றும் பன்னீரை போட்டு நன்றாக குறைத்துக்கொள்ள வேண்டும். நன்கு பசை பதம் வரும் வரை கலக்கிக் கொள்ள வேண்டும். இதனை முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். 10 முதல் 15 நிமிடம் வரை முகத்தில் நன்கு உலர விட வேண்டும். பிறகு மிதமான குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பார்ப்பதற்கு மிருதுவாகவும் பளபளவெனவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்: 1. கஸ்தூரி மஞ்சள் 2. ரோஜா இதழ்கள் 3. செம்பருத்திப்பூ 4. மரிக்கொழுந்து 5. ஆரஞ்சு தோல் 6. வெட்டிவேர் 7. எலுமிச்சை பழத்தோல் 8. பச்சைப்பயிறு இந்தப் பொருட்கள் அனைத்தையும் சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்துப் பொருட்களையும் நன்றாக வெயிலில் காய வைத்து உலர்த்தி கொள்ளவும். பின்பு அதனை நன்றாக அரைத்து பவுடராக்கிக் கொள்ளவும். இதனை தேவைப்படும் நேரத்தில் வேண்டும் என்ற அளவிற்கு எடுத்துக்கொண்டு அதில் தயிர், ரோஸ் வாட்டர், அல்லது எலுமிச்சை பழச்சாறு இதில் ஏதாவது ஒன்றோடு நன்றாக கலந்து பசை போன்று குறைத்துக்கொள்ளவும். அதனை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் நன்றாக பூசிக்கொண்டு 10 முதல் 15 நிமிடத்திற்கு உலரவிடவும். அதற்குமேல் விட வேண்டாம். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகப்பொலிவு முன்பை விட அதிகமாக இருக்கும்.