இப்போ இருக்கிற சுற்றுசூழல் நம்ம முகத்தில் நிறைய முகப்பரு எண்ணெய் வடிதல் கரும்புள்ளிகள் அதிகமாக இருக்கு. அந்த மாதிரி இருக்கிறவங்களுக்கு தினமும் சோப்பு போட்டாலோ, க்ரீம் தடவினாலோஅது சரியாகாது. அதுக்கு நம்ம வீட்டுல இருந்து ஒரு சரியான ஒரு பேஸ்ட் தயாரித்து அதை நாம் வாரத்தில் ஒரு நாளோ அல்லது வாரத்தில் மூணு நாளோ முகத்தில் தடவி வரும் போது முகப்பொலிவு பெற்று , முகம் பளிச்சின்னு ஆகிடும் . முகப்பரு, கரும் புள்ளி, எண்ணெய் வடிதல், இதெல்லாம் குறைந்துகிட்டு வரத கண்கூடா பாப்பிங்க. முல்தானிமெட்டிபொடி: முல்தானி மெட்டி இது நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருப்பீங்க ஆனால் பயன்படுத்தி இருக்க மாட்டீங்க. இந்த முல்தானி மெட்டி நீங்க பயன்படுத்தி பாருங்க ரொம்ப முகம் அழகாக ஆகிறத நீங்கள் கண்கூடாக பார்ப்பீங்க.முல்தானிமெட்டி கட்டியாக இல்லைன பொடியாக டிபார்ட்மென்ட் ஸ்டார்களில் கிடைக்கும். முல்தானி மெட்டி எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம். ஒரு பவுலில் இரண்டு டீஸ்பூன் முல்தானி மெட்டி எடுத்துக்கோங்க அதுல கொஞ்சமா ரோஸ் வாட்டர்(பன்னிர் ) ஒரு தேக்கரண்டி ஊத்தி கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊத்தீகோங்க நல்லா திக்காவும் இல்லாம ரொம்ப தண்ணியாக இல்லாமல் கலந்துகொள்ளுங்க. முகத்தில ஒரு இடம் விடாம நல்லா தடவுங்க ,கண்ணுக்கு தடவ வேண்டாம். விசிறியில் காய வைக்க கூடாது. சாதாரணமாக வீசிட்டு இருக்க இயற்கை காத்துல தான் நீங்க முகத்தை காய வைக்கணும். காய்ந்த உடன் அதன் மேல் கொஞ்சமாக ரோஸ் வாட்டர்(பன்னிர் ) எடுத்து முகத்தின் மேல தடவ வேண்டும் அதுக்கு அப்புறம் மறுபடியும் முல்தானி மெட்டி காய்ந்த உடனே சிறிது நேரம் கழித்து மீதி இருக்கிற முல்தானிமெட்டி மறுபடியும் காய்ந்த முல்தானி மெட்டி மேல் போடுங்க' இதே மாதிரி 3 முறை நீங்க தடவுங்கள். . சாதாரணமான குளிர்ந்த நீரில் சோப்பு எதுவும் போடாமல் கழுவுங்கள் . அப்பறம் பாருங்க உங்களுடைய முகம் எவ்வளவு எண்ணெய் பிசுபிசுசலாம் இல்லாம சருமம் ரொம்ப மெது மெதுன்னு ரொம்ப அழகா இருக்கிறத நீங்களே கண்கூடாக பார்ப்பீர்ங்க.வாரத்தில் 2 முறை அல்லது 3 முறை இந்த மாதிரி பண்ணுங்க, கரும்புள்ளி முகப்பரு இது எல்லாம் சீக்ரம் போகும்.முகம் ரொம்ப பளிச்சின்னு ஆகிட்டே இருக்கும் வெயில் காலத்துல பாத்தீங்கன்னா எண்ணெய் வடிதல் இல்லாம முகம் பொழிவு பெற்று ரொம்ப நல்லா இருக்கும்.