ஒரே வாரத்தில் முகம் பளபளக்க என்ன செய்ய வேண்டும் ஏதாவது சுபநிகழ்ச்சிக்கு போக வேண்டுமென்றால் தான் முகம் பொலிவிழந்து இருப்பதை கவனிப்போம். முகம் பொலிவாக இல்லை என்பதை உணர்வோம் அப்படிப்பட்ட நேரத்தில் குறுகிய கால கட்டத்தில் முகம் பொலிவு பெற பலர் எதையாவது பின்பற்றி அதில் திருப்தி இல்லாமல் போவதும் உண்டு. பின்வரும் முறையை பின்பற்றினால் கண்டிப்பாக ஒரே வாரத்தில் பொலிவான முகத்தை பெறுவீர்கள். முல்தானி மெட்டி, இவை கடைகளில் எளிதாக கிடைக்கும். முல்தானி மெட்டியை நீங்கள் வெளியில் செல்லும் முன்பு ஒரு அரை மணி நேரம் முகத்தில் போட்டால் மட்டும் போதும் பளிச்சென்று முகம் ஆகிவிடும். வீட்டில் உள்ள சில பொருட்களை இதில் சேர்த்து முகத்தில் தடவுவதன் மூலம் முக பொலிவை அதிகரிக்க செய்யலாம். இந்த கலவையை எப்படி செய்வது என்பதை பார்ப்போம். தேவையான பொருட்கள்: 1.முல்தானி மெட்டி 2.தக்காளி 3.எலும்பிச்சை 4.காய்ச்சாத பால் செய்முறை : ஒரு கப்பில் முல்தானிமெட்டி இரண்டு தேக்கரண்டி, அதில் அரை தக்காளி சாறு அல்லது தக்காளியை நன்கு மைய அரைத்து முல்தானி மட்டியுடன் சேர்த்துக் கொள்ளவும். பின்பு அதில் எலுமிச்சைச்சாறு ஒரு தேக்கரண்டி இதில் போட்டுக் கொள்ளவும். பிறகு தண்ணீர், அல்லது தயிர் அல்லது, காய்ச்சாத பால் இவற்றில் ஏதேனும் ஒன்றை முல்தானி மெட்டியுடன் இட்லி மாவு பதத்திற்கு கலவையை தயாரித்துக் கொள்ளவும். இவற்றை கண் தவிர முகத்தின் மற்ற இடங்களில் தடவவும் மற்றும் கழுத்து பகுதியில் தடவி கொள்ளவும். விசிறியை போடாமல் இயற்கை காற்றில் முகத்தை காயவிடவும். நன்கு காய்ந்ததும் முகத்தில் லேசாக தண்ணீரில் நனைத்து மீண்டும் காயவைக்கவும். பிறகு மிதமான சூடு உள்ள தண்ணீரில் முகத்தை கழுவி விடவும். முல்தானி மெட்டி போட்ட பிறகு சோப்புப் போட்டு முகத்தைத் கழுவ நினைப்பவர்கள் முல்தானி மெட்டி கழுவி 10 நிமிடத்திற்கு பிறகு சோப்பு போட்டு கழுவி விடவும். இந்த முல்தானி மெட்டியை வாரத்தில் மூன்று முறை அல்லது நான்கு முறை பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள அழுக்குகள் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளிச்சென்று முகம் பொலிவுடனும் காணப்படும்.