தலையில் பேன் ஈறு இருந்தாலே தலைமுடி உதிர்ந்து கொண்டே இருக்கும், காரணம் முடிக்கு தேவையான ரத்தம் மற்றும் சத்துக்கள் முடிக்கு செல்வதில்லை. பேன் மற்றும் ஈறு இரத்தத்தை குடிப்பதால் முடிக்குத் தேவையான ஊட்டச் சத்து கிடைக்காமல் முடி உதிர்ந்து விடுகிறது.பேன் ஈறு தொல்லை நீங்கும் வரை முடி கொட்டிக் கொண்டுதான் இருக்கும்.
செம்பருத்தி பேன் ஈறு தலையில் தங்க விடாமல் விரட்டக் கூடிய ஒரு இயற்கையான நிவாரணி ஆகும். இதனை முறையாக பயன்படுத்துவதால் பேன் ஈறு தொல்லையில் இருந்து விடுபடலாம். செம்பருத்தி இலை செம்பருத்திப் பூ, சீகக்காய், பயித்தம் மாவு ,வெட்டிவேர் பூலாங்கிழங்கு ,வெந்தயம் நெல்லிக்காய். இவற்றை வெயிலில் நன்கு காயவைத்து பிறகு மிக்ஸியில் அரைத்து ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.இப்பொழுது இருக்கின்ற கால சூழ்நிலைகளில் இவை யாவும் செய்ய முடியாது என்கின்ற நிலையில் நாட்டு மருந்து கடைகளில் செம்பருத்தி பொடி கிடைக்கின்றது.
செம்பருத்தி பொடி 2 தேக்கரண்டி எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து நிமிடம் அல்லது 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும் குளிப்பதற்கு முன்.பிறகு இவற்றை தலையில் ஐந்து நிமிடங்கள் ஊறவைத்து பிறகு குளிக்கவும். இவ்வாறு வாரம் இரு முறை குளிப்பதன் மூலம் தலையில் உள்ள பேன் ஈறு தொல்லை நீங்கி முடி நன்கு வளரும். இயற்கை என பொருட்கள் பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்வு குறைகிறது மற்றும் முடிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இதனைப் பயன்படுத்திய இரண்டு மூன்று நாட்களில் உங்களது தலையில் பேன் குறைந்து இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். செம்பருத்தி பொடியை பயன்படுத்துவதன் மூலம் இளமையிலேயே நரைக்கின்ற நரைமுடி ,செம்பட்டை முடிமற்றும் முடி உதிர்தல் குறையும் ,முடி கருமையாக மாறிவிடும்.