முடி உதிர்வதற்கான காரணத்தை தெரிந்து கொண்டு அதற்க்கு தகுந்தாற் போல முடியை பராமரித்து வந்தால் , முடி கொட்டும் பிரச்சனை விரைவாக குறைந்து சரியாகிவிடும். பிறகு ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் நன்கு அடர்த்தியாக நீளமாக வளரும். நம் சிறுவயதிலேயே பார்த்திருப்போம் பாட்டி மற்றும் அம்மா நம் முடியை கவனித்துக் கொண்டிருக்கும் பொழுது முன் முடி நன்கு வளர்ந்து அடர்த்தியாக இருக்கும் கையை பிடிக்க முடியாத அளவுக்கு முடி அடர்த்தியாக இருக்கும் என்பதை நீங்களே அடிக்கடி சொல்லி இருப்பீர்கள் அப்படி இருந்த முடி இப்பொழுது ஏன் கொட்டுகிறது.
தூங்குறதுக்கும் முடி கொற்றத்துக்கும் என்ன சம்மந்தம்னு நெனைக்காதிங்க . உடம்புல இருக்க எல்லா செல்லுக்கும் ஒய்வு ரொம்ப முக்கியம். அதே மாதிரி முடி கொட்டாம வளரத்துக்கும் ஓய்வு முக்கியம். சரியான தூக்கமின்மை இல்லாத காரணத்தால் உடலில் பல உபாதைகள் ஏற்படும் அவற்றுள் ஒன்று முடி உதிர்தல் சரியான தூக்கம் இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக பாய்ந்து உடலில் உள்ள சூடு தணிந்து முடி உதிர்வு இல்லாமல் இருக்கும்.
சராசரி தூங்கும் நேரம் தாண்டி அதிக நேரம் தூங்குவதால் உடல் வெப்பம் அதிகமடையும் இதனாலும் முடி வலுவிழந்து கொட்டக்கூடும். இரவு 9 மணிக்கு படுத்தால் பகல் 12 மணிக்கு எழக்கூடும் அதனை தவிர்க்கவும்.
அதிகப்படியான மன அழுத்தம் நிறைய கவலைகள் மனதில் போட்டு குழப்பிக் கொண்டு இருப்பது, இதுபோன்ற மன அழுத்தத்தால் கண்டிப்பாக முடி கொட்டும். வேலை பார்ப்பவர்கள் நிறைய பேர் மன அழுத்தத்துடன் இருப்பார்கள் அவர்களுக்கு முடிகொட்டுவது என்கின்ற பிரச்சினை நிரந்தரமாக அமைந்துவிடும்.
தலைக்கு ஏற்ற எண்ணெய் தேய்க்காமல் இருப்பது அடிக்கடி வெவ்வேறு ஷாம்பு போட்டு தலைக்கு ஊற்றுவது, எண்ணெய் தேய்க்காமல் முடியை விடுவது, தலைக்கு குளிக்காமல் மாதம் ஒருமுறை இருமுறை குளிப்பது போன்று தலைமுடியை பராமரிக்காமல் இருப்பது முடி கொட்டுவதற்கு முக்கிய காரணம். இவற்றை தவிர்ப்பதன் மூலம் முடி கொட்டுவதை சுலபமாக தவிர்க்கலாம்.
அதேபோல் தினமும் தலைக்கு குளித்தால் கண்டிப்பாக முடி கொட்டும். வாரம் இருமுறை தலைக்கு குளித்தாலே போதும். தினமும் தலைக்கு குளித்தால் முடியின் வேர்கள் வலுவிழந்து முடி கொட்டுவது அதிகமாக இருக்கும் தினமும் தலைக்கு ஊற்ற கூடாது.
தலைக்கு எண்ணெய் வைக்காமல் தினமும் அல்லது வாரம் இருமுறை தலைக்கு குளித்தால் கண்டிப்பாக முடி பாதியாக வெடித்து அல்லது வேரோடு கண்டிப்பாக முடி கொட்டும் அந்த இடத்தில் முடி வளர்வது கடினமாகும். அதனால் அப்படி வறண்ட தலையில் தண்ணீர் ஊற்றுவதை தவிர்க்கவும்.
சிறுவயதில் இருந்தே ஒரே தண்ணி தலைக்கு ஊற்றி பழகியவர்கள் வேறு தண்ணீரை தலைக்கு ஊற்றும் போது கண்டிப்பாக முடி கொட்டும்.அருவித் தண்ணீர் குளித்து பழகியவர்கள் ஆற்றுத் தண்ணீரில் குளித்தால் இது மாதிரி தண்ணீரை மாற்றி குளிக்கும் பொழுது கண்டிப்பாக முடி கொட்டும்.
தலையில் பேன் மற்றும் ஈறு இருந்தால் கண்டிப்பாக முடி கொட்டும் தலைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உணவாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பதினால். பேன் இரு இருக்கும்வரை கண்டிப்பாக முடி கொட்டும். அதனால் முதலில் பேன் மற்றும் ஈறு போவதற்கு வேண்டிய வைத்தியத்தை செய்துவிட்டால். பிறகு முடி கொட்டுவதை சரி செய்ய முடியும்.
பொடுகு சிலருக்கு குறைவாக அல்லது அதிகமாகவோ தலையில் இருக்கும் அவரின் தலையில் பொடுகு இருப்பவர்கள் தலையை அடிக்கடி நன்கு சொரிவதனால் கண்டிப்பாக முடி கொட்டும்.
உடம்பில் இரும்பு சத்து குறைய ஆரம்பிக்கும் பொது முடி உதிர்தல் அதிகமாக இருக்கும். அதனால் இரும்பு சத்து நிறைந்த உணவுகளை அன்றாடம் எடுத்து கொள்வதினால் முடி உதிர்வை சரி செய்யலாம்.
1. தூங்கி எழுந்தவுடன் தலை வாரக்கூடாது. அவ்வாறு தூங்கி எழுந்தவுடன் முடியை வாரினால் கண்டிப்பாக முடி கொட்டும். அதிக வியர்வையால் தலை நனைந்து இருந்தால் அந்த நேரத்தில் தலையை சீவ கூடாது அப்பொழுது அவ்வாறு தலையை முடியை வாரும் போது முடியின் வேர்க்கால்கள் வலுவிழந்து முடி கொட்டுதல் அதிகமாகும். 2. தலையில் எண்ணை வைத்தவுடன் தலையை வாரக்கூடாது 5 அல்லது 10 நிமிடங்கள் கழித்து தலையை வார வேண்டும். இதுவும் முடி உதிர காரணம். 3. தலைக்கு குளித்த உடனே தலையை சீப்பு போட்டு வாரக்கூடாது. அப்பொழுது கண்டிப்பாக முடி கொத்து கொத்தாக முடி உதிரும். 4. தலைமுடியை இருக்கமாக துணியை வைத்து கட்டக்கூடாது மற்றும் முடியை இறுக்கமாகவும் பின்ன கூடாது.