பொது: முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும், அத்தகையவர்கள் அவர்கள் மிக்க அறிவாளிகளாக திகழ்வார்கள். வாழ்க்கைக்குரிய சகல வசதிகளையும் வீடு, வாசல், வாகனங்கள் முதலிய சுகத்தையும் பெறுவார்கள். தெய்வ பக்தி நிரம்பியவர்களாகத் திகழ்வார்கள். நல்லோர்களின் சேர்க்கையுண்டாகும் மிக்க அறிவாளிகளென்று மக்களால் போற்றப்படும் சிலருக்கு முதுகில் மச்சம் இருக்கும். "முதுகின் இடது பக்கம் தோள்களுக்கு அருகில் மச்சம்" இருந்தால், அவர்கள் செய்யும் செயல்களெல்லாம் மிகவும் முன்யோசனையுடன் கூடியனவாகவும் தக்க பலனளிப்பனவாகவும் இருக்கும். "முதுகின் வலது தோள்களுக்கு அருகில் மச்சம்" இருப்பவர்கள் மிகவும் தைரியசாலிகள் இருப்பார்கள். இவர்களில் சிலர் படைவீரர்களாக, சண்டையிடுவதில் வல்லமையுடையவர்களாகவோ, இருப்பார்கள். உடல் வலிமை மிக்கவர்களாகவும் தோற்றமளிப்பார்கள். "முதுகில் முதுகெலும்பின் அருகில் மச்சம்" உள்ளவர்கள் அரசாங்க அதிகாரிகளாக இருப்பார்கள். இவர்களுக்கு தனது பதவியில் திடீரென ஏற்றும் உண்டாகும். அரசாங்கத்திற்கு ஆலோசனை செலும் அதிகாரிகளாகவும் சிலர் இருப்பார்கள் செல்வமும் செல்வாக்கும் பெற்று புகழ்மிக்கவர்களாகத் திகழ்வார்கள். "முதுகின் வலது அல்லது இடது ஓரத்தில் மச்சம்" இருந்தால், அத்தகையவர்கள் எந்த வேலையையும் துணிவுடன் செய்யமாட்டார்கள். அதனால் கோழை யென்றும், சோம்பேறியென்றும் பிறரால் கேலி செய்யப்படுவார்கள். "முதுகெலும்பின் அடிபாகத்தில் பீடத்தின் இடையே மச்சம்" இருந்தால், மிகவும் ஆரோக்கியம் உள்ளவனாகவும், நீண்ட ஆயுள் உள்ளவனாகவும் இருப்பான், இவர்களில் சிலர் யோகாப்பியாசம் செய்து உடல் வலிமையையும் உள்ளத்தின் வலிமையையும் வளர்த்துக் கொள்வார்கள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.