"தொப்புள் மீது மச்சம்" உள்ளவர்கள் கொஞ்சம் பணக்காரர்களாக இருப்பார்கள். வாழ்க்கைக்குரிய வசதிகள் இவர்களுக்குச் சாதாரணமாக இருக்கும். அளவுக்கு மீறிய பசியுள்ளவர்களாகவும், அப்பசியை ஆற்றிக் கொள்வதற்கு அடிக்கடி புசிப்பவர்களாகவும் இவர்கள் இருப்பார்கள். "தொப்புள் மீதே மச்சமில்லாமல் அந்த மச்சம் தொப்புளுக்கு சற்று கீழே இருக்குமாகில்", அத்தகையவர்கள் பல வகைகளில் பணம் ஈட்டுவார்கள் ஆனால் விதிவசமாக, அவர்கள் சேர்த்து வைத்த பண மெல்லாம் கொள்ளையடிக்கப்படும். அவர்கள் எந்த வேலையையும் துணிந்து செய்யாமல் யோசித்து யோசித்துத் தாமதமாகச் செய்வார்கள். ஆகவே, முயற்சிகள் நினைத்தபடி பலன் தரா. வீட்டில் தங்குவதைவிட வெளியூர்ப் பிரயாணங்கள் செய்வதென்றால் இவர்களுக்கு மிகவும் இஷ்டம். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.