Macham-palangal | | Tamil Best Beauty tips site | Laddu muttai தொப்புள் மீது மச்சம் இருந்தால் என்ன பலன் - ஆண்களுக்கு macham-palangal-machapuraanam

தொப்புள் மீது மச்சம் இருந்தால் என்ன பலன் - ஆண்களுக்கு

macham-palangal-machapuraanam

"தொப்புள் மீது மச்சம்" உள்ளவர்கள் கொஞ்சம் பணக்காரர்களாக இருப்பார்கள். வாழ்க்கைக்குரிய வசதிகள் இவர்களுக்குச் சாதாரணமாக இருக்கும். அளவுக்கு மீறிய பசியுள்ளவர்களாகவும், அப்பசியை ஆற்றிக் கொள்வதற்கு அடிக்கடி புசிப்பவர்களாகவும் இவர்கள் இருப்பார்கள். "தொப்புள் மீதே மச்சமில்லாமல் அந்த மச்சம் தொப்புளுக்கு சற்று கீழே இருக்குமாகில்", அத்தகையவர்கள் பல வகைகளில் பணம் ஈட்டுவார்கள் ஆனால் விதிவசமாக, அவர்கள் சேர்த்து வைத்த பண மெல்லாம் கொள்ளையடிக்கப்படும். அவர்கள் எந்த வேலையையும் துணிந்து செய்யாமல் யோசித்து யோசித்துத் தாமதமாகச் செய்வார்கள். ஆகவே, முயற்சிகள் நினைத்தபடி பலன் தரா. வீட்டில் தங்குவதைவிட வெளியூர்ப் பிரயாணங்கள் செய்வதென்றால் இவர்களுக்கு மிகவும் இஷ்டம். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.




maarbil-macham-palangal
"வலது மார்பில் மச்சம்" உள்ளவர்கள் வசதியுள்ளவர்களாக இருந்தாலும் எதிர்பாராத கஷ்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நேருவதன் மூலம் சொத்துக்கள் எல்லாவற்றையும் இழந்து, துன்பகரமான வாழ்க்கையை நடத்த வேண்டியிருக்கும். இவர்களுக்கு ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகள் அதிகமாக இருக்கும். "இடது மார்பில் மச்சம்" இருந்தால், அத்தகையவர்கள் பெண் சந்ததியைக் காட்டிலும் புருஷ சந்ததி அதிகமாக உள்ளவர்கள் வாழ்க்கைக் குரிய வசதிகள் யாதுமின்றி ஏழைகளாகவே காலம் கழிப்பார்கள். அதிகமாக அவர்கள் காமப்பற்றுள்ளவர்கள் எடுத்த காரியத்தை முடித்துவிடக்கூடிய ஆற்றல் உள்ளவர்கள். "இடது மார்பில் ஸ்தனத்திற்கு இடதுபுறம் மச்சம்" இருந்தால் நெறி தவறிய வாழ்க்கையாளர்களாகவும், நிலையில்லா மனத்தவராகவும், கோபம் நிறைந்தவர்களாகவும் இருப்பர். எப்பொழுதும் பிரயாணம் செய்வதில் விருப்பம் அதிகமாக உள்ளவர்கள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 03-06-2020
macham-palangal-machapuraanam
"வலது பொறியில் மச்சம்" இருந்தால் பாராத வகையில் வியாபார மூலமாகவோ, ரேஸ், லாட்டரி மூலமாகவோ பாராத வகையில் தனலாபம் உண்டாகும். இவர்களுக்குச் சிறு வயதிலேயே திருமணம் நடைபெறு மென்று சாஸ்திரம் கூறுகிறது. குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 03-06-2020
puruvathil-macham-palangal
"வலது புருவத்தின் மீது மச்சம்" இருந்தால், அத்தகையவன் வாழ்க்கைக்குரிய சகல போகங்களையும் பெற்றிருப்பான். மிகவும் அறிவாளியாகவும், அதே நேரத்தில் பொறாமை, கர்வம், கோபம் முதலிய தீய குணங்களில்லாமல் மிகவும் அமைதியான குணமும், சிரித்த முகமும், பிறருக்கு உதவும் தன்மையாவுமாக காட்சியளிப்பான். இவனுக்கேற்ற ரூபமும் குணமும் நிறைந்த மனைவி கிடைப்பாள். மனைவி மூலமாய் அளவற்ற செல்வமும் பெறுவான். வாலிபப் பருவத்திலேயே திருமணம் நடந்துவிடும். புருஷன் மனைவியரிடையே ஒற்றுமையும் அன்பும் நிறைந்திருக்கும் திகழ்வான். ஏகபத்தினி விரதம் பூண்டவனாகவும். "இடது புருவத்தில் மச்சம்" இருந்தால் மேற்கண்ட பலன்கள் அனைத்தும் எதிரிடையாக இருக்கும். எதிர்பாராத ஆபத்துக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரும். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 03-06-2020
macham-palangal-machapuraanam
பொது: பட்டக்ஸ் மீது எங்கே மச்சம் இருந்தாலும் நன்மை தராது. இத்தகையவர்கள் ஏழ்மைக்கு இலக்காகி உழைத்து வாழ்க்கை நடத்துவார்கள். "வலது பட்டக்ஸ் மீது மச்சம்" உள்ளவர்கள் சிறிதளவு வசதியுள்ளவர்களாக இருப்பர். "இடது பட்டக்ஸ் மீது மச்சம்" இருந்தால் காம உணர்ச்சி அதிகமுள்ளவர்களாகவும் வேசி லோலர் களாகவும் இருந்து சொத்து சுதந்திரங்களையெல்லாம் துறந்து பல விதமான நோய்களுக்கு ஆளாவார்கள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 03-06-2020
macham-palangal-machapuraanam
பொது: இடது பாதம் வலது பாதம் என்று பாதங்கள் இரண்டு இருப்பதால், இடது பாதத்தில் உள்ள மச்சங்களும் வலது பாதத்தில் உள்ள மச்சம்களுக்கும் தனித்தனியாகப் பலன் உண்டு. "இடது பாதத்தில் மச்சம்" உள்ள ஆண்கள் பொதுவாக ஒரு இடத்தில் நில்லாமல் சதா பிரயாணம் செய்பவர்களாகவே இருப்பார்கள். இவர்களுக்கு ஒன்றின் மீது ஒன்று ஏதாவது கஷ்டங்கள் சிரமங்கள் வந்தவாறே இருக்கும். "இடது பாதத்தில் வலது புறமாக மச்சம்" இருந்தால் அத்தகையவர்கள் எல்லா சமயங்களிலும் வேதனை தோய்ந்த முகத்துடன் காட்சி தருவார்கள்.அதன் மூலம் அவர்களுக்கு ஒன்றன் மீதொன்றாக ஏதோ கஷ்டங்கள் வந்து மனதைப் பாதிக்கிறதென ஊகிக்க. மதத்திற்குரிய முறைப்படி நடக்காமல் எல்லோருடைய வெறுப்புக்கு ஆளாகக்கூடும். உறவினர்களுடனும், நண்பர்களுடன் வீண் விரோதங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும். சிலர் வேசிலோலர்களாகவும் குடி காரர்களாகவும் சொத்து சுதந்திரங்களை அழித்துவிடுவார்கள். "இடது பாதத்தில் இடப்புறம் மச்சம்" இருந்தால், அத்தகைய ஆண்கள் தீய தொழில்கள் புரிபவர்களாகக் காட்சியளிப்பார்கள். மதுபானம், விபசாரம், முதலியவைகளை வாழ்நாள் முழுதும் விடமாட்டார்கள்.அதன் காரணமாக பொய், பித்தலாட்டம், திருட்டுத் தனம் முதலிய தீமைகள் இவர்களைப் பற்றிக்கொள்ளும். இவ்வாறு தூய்மையற்ற வாழ்க்கையைப் பின்பற்றுவதால் இவர்கள் கொடிய நோய்களுக்கு இலக்காகி முழுகவே அகால மரணம் எய்துவார்கள். வாழ்வு வாழாமல் அற்பாயுளுள்ளவர்களாகவே அகால மரணம் எய்துவார்கள். வலது பாதத்தில் மச்சம்: போது: வலது பாதத்தில் இருப்பது தன்மையைக் குறிக்கும். இவர்கள் சிறப்பாக வாழ்க்கை நடத்துவார்கள். "வலது பாதத்தில் வலப்புறத்தில் மச்சம்" இருந்தால், இத்தகையவர்கள் மிகவும் புனிதமானவர்கள், பிறர் பெண்டிரைக் கண்ணெடுத்தும் பாராத உத்தமர்கள். எதையும் சீர்தூக்கிப் பார்த்த பிறகே செயல்படுபவர்கள். எடுத்த காரியத்தை முடித்த பிறகே ஓய் வெடுக்கும் பிடிவாத குணமுள்ளவர்கள். பொதுக் காரியங்களையும் புண்ணிய காரியங்களையும் முன்னின்று நடத்தும் ஆற்றல் பெற்றவர்கள். பாரத நாட்டுப் பழம்பெருமைகளிலும், புராண இதிகாசங்களிலும் மிகவும் பற்றுள்ளவர்கள். தெய்விக ஸ்தலங்களையும் புண்ணிய நதிகளையும் தரிசித்துப் போற்றி வாழும் புண்ணிய புருஷர்கள். பொதுவாக, மனிதத் தன்மை நிரம்பிய பாக்கியசாலிகளாக இவர்கள் திகழ்வார்கள். "வலது பாதத்தின் மீது இடது புறமாக மச்சம்" காணப்பட்டால், நல்லது கெட்டது தெரியாத சாதாரண பாமர மக்களாக இருக்கிறார்கள். மற்ற தெய்வ பக்தி உள்ளவர்களாகவும், நீதிமான்களாகவும் படாடோபமோ பாராட்டுதலோ இல்லாமல் சாதுக்களாக வாழ்நாளைக் கழித்து விடுவார்கள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 03-06-2020
macham-palangal-machapuraanam
விசாலமான நெற்றியுள்ளவர்கள் வாழ்க்கையில் சகல வசதிகளும் பெற்று சிறப்பாக வாழ்பவர்கள்.பேரும் புகழும் பெற்ற அறிவாளிகள். எதையும் திறம்பட யோசனை செய்யும் ஆற்றல் பெற்றவர்கள். "விசாலமான நெற்றி மீது மச்சம் இருந்தால்" வீடு வாசல், நிலபுலன்களை, வாகன வசதிகள் இவையெல்லாம் நிறைந்து விளங்குவார்கள். தாம் அனுபவிப்பது மட்டுமின்றி பிறருக்கும் குறிப்பறிந்து கொடுக்கும் கொடையாளிகள் எனப் பெயர் பெற்றவர்கள். "நெற்றியில் புருவங்களின் இடையே மச்சம்" இருந்தால், வாழ்க்கையில் அனுபவிப்பதற்குரிய சகல சுகங்களையும் அனுபவிப்பதில் ஆர்வமுள்ளவன். வாசனைப்பொருள்களை அதிக அளவில் வாங்கி உபயோகிப்பவன். நண்பர்களும் பந்துக்களும் விருப்பத்துடன் சேர்ந்து இவனுடைய உதவியும் பெறக்கூடிய வகையில் தாராள மனப்பான்மை உள்ளவன். "நெற்றியில் புருவங்கள் இடையிலிருந்து வலது கன்னத்திற்கு இடையே மச்சம்" எங்கிருந்தாலும் அதாவது, அது கருப்பு மச்சமாக இருந்து, நெற்றியும் விசாலமாக இருந்தால், அவன் மிகவும் அதிருஷ்டசாலியாகத் திகழ்வான். மிகவும் சாமர்த்திய சாலியென்றும் புகழ் பெறுவான். ஆனால், மேற்கண்ட மச்சம் கருப்பாகவோ, வெளுப்பாகவோ இருந்தாலும் நெற்றி குறுகலாக இருந்தாலும், துரதிருஷ்டசாலியாகவும் மூடனாகவும் இருப்பான். "நெற்றியின் வலது புறம் மச்சம்" இருந்தால், நெற்றியும் விசாலமாக இருந்தால், அத்தகையவர்களுக்கு மக்களிடையே நல்ல புகழ் ஏற்படும். இவர்களுடைய வாழ்க்கையில் பலமுறை எதிர்பாராத வகையில் ரேஸ், லாட்டரி, வியாபார முறைகளில் தனலாபமுண்டாகும். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 03-06-2020
macham-palangal-machapuraanam
பொதுவாக நெஞ்சின் எந்தப் பகுதியில் மச்சம் இருந்தாலும், அது நன்மையை அளிக்கும். இவருக்கு பித்ரார்ஜிதம் அல்லது சுயார்ஜிதமான சொத்துக்கள் அவ்வளவாக இல்லாமல் இருப்பினும், திருமணத்திற்குப் பிறகு சொத்து சுதந்திரங்கள் அதிகமாகும். மனைவி மூலமாகவும் அதிக அளவில் தனலாபம் உண்டாகும். "நெஞ்சின் வலது பாகத்தில் மச்சம்" இருந்தால், சங்கீதக் கலையில் மிக்க நிபுணனாக இருப்பான். பரம்பரைச் சொத்துக்கள் அதிகமாக இருப்பதால் சேவகம் புரிய வேண்டிய நிலையிராது. சுயநலத்தைக் காட்டிலும் பொது நலத்துக்காகவே பணிபுரியும் தியாக மனப்பான்மையுள்ளவன் இவன். "நெஞ்சின் இடது புறம் மச்சம்" இருப்பின் வாழ்க்கைக்குரிய வசதிகளைப் பெற்றவர்களாக இருப்பர். வாழ்க்கையைச் சிறப்பாக கழிக்க ஆற்றலுடையவர்கள் அதிகமாக பசிக்கும் இயல்புடையவர். நெறி தவறாமல் தமது வாழ்க்கையை வகுத்துக் கொள்பவர்களாகயைால் பிறருடைய பாராட்டுதலைப் பெறுபவர். "நெஞ்சுக்குக் கீழே மச்சம்" இருந்தால், இளம் வயதிலேயே திருமணம் நடக்கும். மனைவி வந்த பிறகே இவரது வாழ்க்கை செம்மைப்படும். மனைவி மூலமாகச் சிலருக்கு சொத்து, பணம் கிடைக்கும். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 03-06-2020