பொது: இடது பாதம் வலது பாதம் என்று பாதங்கள் இரண்டு இருப்பதால், இடது பாதத்தில் உள்ள மச்சங்களும் வலது பாதத்தில் உள்ள மச்சம்களுக்கும் தனித்தனியாகப் பலன் உண்டு. "இடது பாதத்தில் மச்சம்" உள்ள ஆண்கள் பொதுவாக ஒரு இடத்தில் நில்லாமல் சதா பிரயாணம் செய்பவர்களாகவே இருப்பார்கள். இவர்களுக்கு ஒன்றின் மீது ஒன்று ஏதாவது கஷ்டங்கள் சிரமங்கள் வந்தவாறே இருக்கும். "இடது பாதத்தில் வலது புறமாக மச்சம்" இருந்தால் அத்தகையவர்கள் எல்லா சமயங்களிலும் வேதனை தோய்ந்த முகத்துடன் காட்சி தருவார்கள்.அதன் மூலம் அவர்களுக்கு ஒன்றன் மீதொன்றாக ஏதோ கஷ்டங்கள் வந்து மனதைப் பாதிக்கிறதென ஊகிக்க. மதத்திற்குரிய முறைப்படி நடக்காமல் எல்லோருடைய வெறுப்புக்கு ஆளாகக்கூடும். உறவினர்களுடனும், நண்பர்களுடன் வீண் விரோதங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும். சிலர் வேசிலோலர்களாகவும் குடி காரர்களாகவும் சொத்து சுதந்திரங்களை அழித்துவிடுவார்கள். "இடது பாதத்தில் இடப்புறம் மச்சம்" இருந்தால், அத்தகைய ஆண்கள் தீய தொழில்கள் புரிபவர்களாகக் காட்சியளிப்பார்கள். மதுபானம், விபசாரம், முதலியவைகளை வாழ்நாள் முழுதும் விடமாட்டார்கள்.அதன் காரணமாக பொய், பித்தலாட்டம், திருட்டுத் தனம் முதலிய தீமைகள் இவர்களைப் பற்றிக்கொள்ளும். இவ்வாறு தூய்மையற்ற வாழ்க்கையைப் பின்பற்றுவதால் இவர்கள் கொடிய நோய்களுக்கு இலக்காகி முழுகவே அகால மரணம் எய்துவார்கள். வாழ்வு வாழாமல் அற்பாயுளுள்ளவர்களாகவே அகால மரணம் எய்துவார்கள். வலது பாதத்தில் மச்சம்: போது: வலது பாதத்தில் இருப்பது தன்மையைக் குறிக்கும். இவர்கள் சிறப்பாக வாழ்க்கை நடத்துவார்கள். "வலது பாதத்தில் வலப்புறத்தில் மச்சம்" இருந்தால், இத்தகையவர்கள் மிகவும் புனிதமானவர்கள், பிறர் பெண்டிரைக் கண்ணெடுத்தும் பாராத உத்தமர்கள். எதையும் சீர்தூக்கிப் பார்த்த பிறகே செயல்படுபவர்கள். எடுத்த காரியத்தை முடித்த பிறகே ஓய் வெடுக்கும் பிடிவாத குணமுள்ளவர்கள். பொதுக் காரியங்களையும் புண்ணிய காரியங்களையும் முன்னின்று நடத்தும் ஆற்றல் பெற்றவர்கள். பாரத நாட்டுப் பழம்பெருமைகளிலும், புராண இதிகாசங்களிலும் மிகவும் பற்றுள்ளவர்கள். தெய்விக ஸ்தலங்களையும் புண்ணிய நதிகளையும் தரிசித்துப் போற்றி வாழும் புண்ணிய புருஷர்கள். பொதுவாக, மனிதத் தன்மை நிரம்பிய பாக்கியசாலிகளாக இவர்கள் திகழ்வார்கள். "வலது பாதத்தின் மீது இடது புறமாக மச்சம்" காணப்பட்டால், நல்லது கெட்டது தெரியாத சாதாரண பாமர மக்களாக இருக்கிறார்கள். மற்ற தெய்வ பக்தி உள்ளவர்களாகவும், நீதிமான்களாகவும் படாடோபமோ பாராட்டுதலோ இல்லாமல் சாதுக்களாக வாழ்நாளைக் கழித்து விடுவார்கள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.