"வலது புருவத்தின் மீது மச்சம்" இருந்தால், அத்தகையவன் வாழ்க்கைக்குரிய சகல போகங்களையும் பெற்றிருப்பான். மிகவும் அறிவாளியாகவும், அதே நேரத்தில் பொறாமை, கர்வம், கோபம் முதலிய தீய குணங்களில்லாமல் மிகவும் அமைதியான குணமும், சிரித்த முகமும், பிறருக்கு உதவும் தன்மையாவுமாக காட்சியளிப்பான். இவனுக்கேற்ற ரூபமும் குணமும் நிறைந்த மனைவி கிடைப்பாள். மனைவி மூலமாய் அளவற்ற செல்வமும் பெறுவான். வாலிபப் பருவத்திலேயே திருமணம் நடந்துவிடும். புருஷன் மனைவியரிடையே ஒற்றுமையும் அன்பும் நிறைந்திருக்கும் திகழ்வான். ஏகபத்தினி விரதம் பூண்டவனாகவும். "இடது புருவத்தில் மச்சம்" இருந்தால் மேற்கண்ட பலன்கள் அனைத்தும் எதிரிடையாக இருக்கும். எதிர்பாராத ஆபத்துக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரும். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.