"வலது மார்பில் மச்சம்" உள்ளவர்கள் வசதியுள்ளவர்களாக இருந்தாலும் எதிர்பாராத கஷ்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நேருவதன் மூலம் சொத்துக்கள் எல்லாவற்றையும் இழந்து, துன்பகரமான வாழ்க்கையை நடத்த வேண்டியிருக்கும். இவர்களுக்கு ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகள் அதிகமாக இருக்கும். "இடது மார்பில் மச்சம்" இருந்தால், அத்தகையவர்கள் பெண் சந்ததியைக் காட்டிலும் புருஷ சந்ததி அதிகமாக உள்ளவர்கள் வாழ்க்கைக் குரிய வசதிகள் யாதுமின்றி ஏழைகளாகவே காலம் கழிப்பார்கள். அதிகமாக அவர்கள் காமப்பற்றுள்ளவர்கள் எடுத்த காரியத்தை முடித்துவிடக்கூடிய ஆற்றல் உள்ளவர்கள். "இடது மார்பில் ஸ்தனத்திற்கு இடதுபுறம் மச்சம்" இருந்தால் நெறி தவறிய வாழ்க்கையாளர்களாகவும், நிலையில்லா மனத்தவராகவும், கோபம் நிறைந்தவர்களாகவும் இருப்பர். எப்பொழுதும் பிரயாணம் செய்வதில் விருப்பம் அதிகமாக உள்ளவர்கள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.