பொதுவாக நெஞ்சின் எந்தப் பகுதியில் மச்சம் இருந்தாலும், அது நன்மையை அளிக்கும். இவருக்கு பித்ரார்ஜிதம் அல்லது சுயார்ஜிதமான சொத்துக்கள் அவ்வளவாக இல்லாமல் இருப்பினும், திருமணத்திற்குப் பிறகு சொத்து சுதந்திரங்கள் அதிகமாகும். மனைவி மூலமாகவும் அதிக அளவில் தனலாபம் உண்டாகும். "நெஞ்சின் வலது பாகத்தில் மச்சம்" இருந்தால், சங்கீதக் கலையில் மிக்க நிபுணனாக இருப்பான். பரம்பரைச் சொத்துக்கள் அதிகமாக இருப்பதால் சேவகம் புரிய வேண்டிய நிலையிராது. சுயநலத்தைக் காட்டிலும் பொது நலத்துக்காகவே பணிபுரியும் தியாக மனப்பான்மையுள்ளவன் இவன். "நெஞ்சின் இடது புறம் மச்சம்" இருப்பின் வாழ்க்கைக்குரிய வசதிகளைப் பெற்றவர்களாக இருப்பர். வாழ்க்கையைச் சிறப்பாக கழிக்க ஆற்றலுடையவர்கள் அதிகமாக பசிக்கும் இயல்புடையவர். நெறி தவறாமல் தமது வாழ்க்கையை வகுத்துக் கொள்பவர்களாகயைால் பிறருடைய பாராட்டுதலைப் பெறுபவர். "நெஞ்சுக்குக் கீழே மச்சம்" இருந்தால், இளம் வயதிலேயே திருமணம் நடக்கும். மனைவி வந்த பிறகே இவரது வாழ்க்கை செம்மைப்படும். மனைவி மூலமாகச் சிலருக்கு சொத்து, பணம் கிடைக்கும். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.