விசாலமான நெற்றியுள்ளவர்கள் வாழ்க்கையில் சகல வசதிகளும் பெற்று சிறப்பாக வாழ்பவர்கள்.பேரும் புகழும் பெற்ற அறிவாளிகள். எதையும் திறம்பட யோசனை செய்யும் ஆற்றல் பெற்றவர்கள். "விசாலமான நெற்றி மீது மச்சம் இருந்தால்" வீடு வாசல், நிலபுலன்களை, வாகன வசதிகள் இவையெல்லாம் நிறைந்து விளங்குவார்கள். தாம் அனுபவிப்பது மட்டுமின்றி பிறருக்கும் குறிப்பறிந்து கொடுக்கும் கொடையாளிகள் எனப் பெயர் பெற்றவர்கள். "நெற்றியில் புருவங்களின் இடையே மச்சம்" இருந்தால், வாழ்க்கையில் அனுபவிப்பதற்குரிய சகல சுகங்களையும் அனுபவிப்பதில் ஆர்வமுள்ளவன். வாசனைப்பொருள்களை அதிக அளவில் வாங்கி உபயோகிப்பவன். நண்பர்களும் பந்துக்களும் விருப்பத்துடன் சேர்ந்து இவனுடைய உதவியும் பெறக்கூடிய வகையில் தாராள மனப்பான்மை உள்ளவன். "நெற்றியில் புருவங்கள் இடையிலிருந்து வலது கன்னத்திற்கு இடையே மச்சம்" எங்கிருந்தாலும் அதாவது, அது கருப்பு மச்சமாக இருந்து, நெற்றியும் விசாலமாக இருந்தால், அவன் மிகவும் அதிருஷ்டசாலியாகத் திகழ்வான். மிகவும் சாமர்த்திய சாலியென்றும் புகழ் பெறுவான். ஆனால், மேற்கண்ட மச்சம் கருப்பாகவோ, வெளுப்பாகவோ இருந்தாலும் நெற்றி குறுகலாக இருந்தாலும், துரதிருஷ்டசாலியாகவும் மூடனாகவும் இருப்பான். "நெற்றியின் வலது புறம் மச்சம்" இருந்தால், நெற்றியும் விசாலமாக இருந்தால், அத்தகையவர்களுக்கு மக்களிடையே நல்ல புகழ் ஏற்படும். இவர்களுடைய வாழ்க்கையில் பலமுறை எதிர்பாராத வகையில் ரேஸ், லாட்டரி, வியாபார முறைகளில் தனலாபமுண்டாகும். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.