"நகங்களின் அடிபாகத்தில் சதைக்கும் நகத்திற்கும் இடையே" பாதிச் சந்திர பிறை போன்று வெளுப்பாக மச்சங்கள் இருக்கும். இவை சந்திரபிம்பங்கள் போல் அவ்வப்பொழுது தோன்றி மறைந்து கொண்டு இருக்கும். சிலர், நகத்திலுள்ள அந்த மச்சங்கள் நன்கு காட்சியளிக்கும் பொது உடல் நலம் நன்கு இருக்குமென்றும், அவை மங்கலாகக் காணப்படும் போது உடல் நலம் கெடுமென்றும் பலன் கூறுவர். மற்றும் சிலர், அவை நல்ல நிலையிலிருந்தால், உடல் வலிமை மிக்கவர்களாக இருப்பார்கள் என்றும், மங்கலாக இருந்தால் உடல்வலியற்றிருப்பார்களென்றும் கூறுவர். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.