"வலது தொடையில் மச்சம்" இருந்தால் அத்தகையவர்கள் பிறவியிலேயே செல்வந்தர்களாகப் பிறப்பர். இவர்களில் சிலர் துணிகள் நெய்யும் மில் அதிபர்களாகவோ, ஜவுளி வியாபாரம் செய்பவர்களாகவோ இருப்பர். இவர்களுக்குத் தாம் செய்யும் தொழில் மூலமாகவும், மனைவி மூலமாகவும் தனலாபம் உண்டு. வெளி நாடுகளைச் சுற்றியும் வருவர். இவர்களில் சிலர் குஸ்தி சண்டையில் வல்லவர்களாக இருப்பர். இவர்கள் பொதுவாக வாழ்க்கை குரிய சகல வசதிகளையும் பெற்று சுகமாக வாழ் நாட்களைக் கழிப்பார்கள். "இடது தொடையில் மச்சம்" உள்ளவர்கள் ஏழ்மையால் மிகவும் வருந்துவர். சாதாரண வாழ்க்கை நடத்துவதற்கே ஓடியாடி உழைக்க வேண்டியிருக்கும். இவர்களில் சிலர் முரட்டுத்தன 'மான காரியங்களைச் செய்தும், பிறரை இம்சித்தும் வாழ்க்கை நடத்துவர். சிறிதளவே வசதியுள்ளவர்களில் சிலர் வேசிலோலர்களாய்ச் சொத்துக்களை இழந்து வறுமையில் வாடி வருந்துவார்கள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.