பொது: தோள்கள் இரண்டில் எதிலாவது மச்சம் இருந்தால் வாழ்க்கைக்குரிய வசதிகள் அனைத்தும் இருக்கும். "வலது தோளில் மச்சம்" இருந்தால், அத்தகையவர்கள் மிகவும் மனவுறுதி படைத்தவர்கள். எதற்கும் அஞ்சாதவர்கள். சண்டை சச்சரவுகளில் முன் வைத்த காலைப் பின் வைப்பதென்பது இவர்களுக்குத் தெரியாது. இவர்கள் பலம் மிக்க அறிவாளிகள். எப்பொழுதும் ஏதாவது ஒன்றைப் படிப்பதென்றாலும், ஏதாவதொரு புது விஷயத்தைக் கற்றுக் கொள்வதென்றாலும் இவர்களுக்கு விருப்பம் அதிகம்.போகங்கள் நிறையப் பெற்றவர்கள்.பிறருக்கு உதவி செய்வதாக வாக்களித்து விட்டால் அதைத் தவறாமல் நிறைவேற்றக்கூடியவர்கள். "இடது தோளில் மச்சம்" உள்ளவர்கள் உண்ணவும், உடுக்கவும் வசதி பெற்றிருந்தாலும், அமைதியாக இவர்களுக்கு வாழத் தெரியாது. அதாவது காரணத்தை வைத்துக்கொண்டு மற்றவர்களுடன் வாக்குவாதம் வீண் பிடிவாதம் செய்து கொண்டிருப்பார் குணத்தினால் பிறருடைய வெறுப்புக்கு ஆளாகி விடாதீர்கள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.