"சுண்டு விரல் மீதும், சுண்டு விரல் நகத்தின் மீதும் அவ்வப்பொழுது வெளுப்பான மச்சங்கள்" தோன்றித் தோன்றி மறையும் இவ்வாறு வெள்ளை மச்சம் காணப்பட்டால், அத்தகையவர்கள் அந்த சமயத்தில் தொடங்கும் காரியங்கள், அல்லது அவர்கள் ஏற்கனவே செய்யும் வியாபாரங்களில் நல்ல லாபமுண்டாகும். மற்றும் அவர்கள் எடுத்த காரியங்களிலெல்லாம் வெற்றியுண்டாகும். "இதற்கு மாறாக, சுண்டு விரல் மீதாவது, சுண்டு விரல் நகம் மீதாவது கருப்பு மச்சம்" தோன்றினால், அத்தகையவர்களுக்கு மரண காலம் நெருங்கி விட்டதென்று அது சூசனை செய்யும். "வலது கை சுண்டு விரல் மீது மச்சம்" இருந்தால் மிக்க அழகானவன். வாழ்க்கைக்குரிய சகல வசதிகள் பெற்றவனாகவும், அளவு கடந்த காம போகங்களை அனுபவிப்பவனாகவும், அழகாகத் துணிமணிகளை அணிபவனாகவும், எந்தத் தொழிலைச் செய்தாலும் வெற்றியும் லாபமும் பெறுபவனாகவும் திகழ்வான். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.