Macham-palangal | | Tamil Best Beauty tips site | Laddu muttai காதுகளில் மச்சம் இருந்தால் என்ன பலன் - ஆண்களுக்கு macham-palangal-machapuraanam

காதுகளில் மச்சம் இருந்தால் என்ன பலன் - ஆண்களுக்கு

macham-palangal-machapuraanam

பொது: காதுகளின் மீது மச்சம் இருப்பது மிகவும் நன்மையைத் தரும். இரண்டு காதுகளின் மீதும் மச்சம் இருந்தால், அவன் மிக்க செல்வம் குடும்பத்தில் பிறந்தவன். தனது முயற்சியாலும், மேன் மேலும் செல்வத்தை வளர்த்து, மிகவும் பாக்கிய சாலியென பாராட்டப் பெறுவான். "செவிகளின் பின்புறத்தில் மச்சம்" இருந்தால் வாழ்க்கைக்குத் தேவையான சகல வசதிகளும் பெற்றவனாகவும் பிதுரார்ஜிதம், ஸ்வார்ஜிதம் இரண்டும் நிறைந்தவராகவும், தனக்கு ஈடான ரூபமும், குணமும், செல்வமும் நிரம்பப் பெற்ற மனைவியை மணப்பவனாகவும் நீண்ட ஆயுள் உள்ளவனாகவும் புகழுடன் வாழ்வான். "வலது செவி நுனியில் மச்சம்" இருப்பவர்களுக்கு ஜலகண்டம் ஏற்படுமென்று சாஸ்திரம் கூறுகிறது. மற்றும் இயற்கையாகவே இவர்களுக்குத் தண்ணீர் உள்ள இடங்களில் பயம் ஏற்படும். "இடது செவி நுனியில் மச்சம்" இருந்தால்,காம உணர்ச்சி அதிகமுள்ளவனாகவும், பல்வேறு பெண்களுடன் சல்லாபம் செய்து அதன் மூலம் பல நோய்களுக்கு இலக்காகுபவனாகவும் இருப்பான் வருத்தமடைவான். "வலது செவியின் அடியில் மச்சம்" இருந்தால், அவனுக்கு வாழ்க்கைக்கு உரிய வசதிகள் இருந்தும் வீணாகப் பலவிடங்களில் கடன் வாங்கி கடன்காரர்களின் தொந்தரவுகளால் மனம் கலங்குவான். "இடது செவியின் அடியில் மச்சம்" இருந்தால் எந்த வசதியும் இல்லாமல்ஏழ்மையால் வருந்துவான். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.




macham-palangal-machapuraanam
"நாக்கு நுனியில் மச்சம்" இருந்தால், அத்தகையவர்கள் மிக்க அறிவாளிகளெனப் போற்றப்படுவர். அவர்கள் பேசும் பேச்செல்லாம் உண்மையாவும், அவர்கள் கூறும் வருங்காலக் கடந்த காலம் பலன்களெல்லாம் தவறாமல் பலனளிப்பனவாகவும் இருக்கும். இத்தகையவர்கள் ஜோதிட வித்தையை, கற்றவர்களாக இருந்தால் புகழும் நல்ல வருவாய் பெறுவார்கள். "நாக்கின் மேல் மச்சம்" இருந்தால் உலகப் புகழும் பேச்சாளியாகத் திகழ்வான் இவர்களில் சிலர் புராணப் பிரசங்கங்கள் செய்து வாழ்க்கை நடத்துவார்கள். இவர்களில் சிலர் மிகவும் மேதாவிகளாகவும் சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர்களாகவும் புகழ்பெற்றவர்கள். "நாக்கின் அடியில் மச்சம்" இருந்தால் உலகப வாழ்க்கையை வெறுத்த சன்னியாசிகளாகவோ ,அஷ்டாங்க யோகாப்பியாசம் செய்து, ஸித்தி பெற்ற மஹாயோகிகளாகவோ திகழ்வார்கள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 03-06-2020
macham-palangal-machapuraanam
நடுவிரலில் வெளுப்பான மச்சம் தோன்றி நன்கு காணப்பட்டால் சிறப்பாக வியாபாரம் செய்வதன் மூலம் நல்ல லாபமும் சுகபோகங்களும் உண்டாகும். இந்த நிலையில் சிலர் அதிகமாகக் கப்பல் பிரயாணங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும் "வலது கை நடு விரல் மீது மச்சம்" உள்ளவர்கள் எதற்கும் யாருக்கும் கட்டுப்படாது வாழ்க்கை நடத்துபவன். மதுபானங்கள் அருந்துவதில் மிகக் விருப்பம் கொண்டு சொத்து சுதந்திரங்களை அழித்த விடுவான். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 03-06-2020
macham-palangal-machapuraanam
"நகங்களின் அடிபாகத்தில் சதைக்கும் நகத்திற்கும் இடையே" பாதிச் சந்திர பிறை போன்று வெளுப்பாக மச்சங்கள் இருக்கும். இவை சந்திரபிம்பங்கள் போல் அவ்வப்பொழுது தோன்றி மறைந்து கொண்டு இருக்கும். சிலர், நகத்திலுள்ள அந்த மச்சங்கள் நன்கு காட்சியளிக்கும் பொது உடல் நலம் நன்கு இருக்குமென்றும், அவை மங்கலாகக் காணப்படும் போது உடல் நலம் கெடுமென்றும் பலன் கூறுவர். மற்றும் சிலர், அவை நல்ல நிலையிலிருந்தால், உடல் வலிமை மிக்கவர்களாக இருப்பார்கள் என்றும், மங்கலாக இருந்தால் உடல்வலியற்றிருப்பார்களென்றும் கூறுவர். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 03-06-2020
macham-palangal-machapuraanam
பொது: தோள்கள் இரண்டில் எதிலாவது மச்சம் இருந்தால் வாழ்க்கைக்குரிய வசதிகள் அனைத்தும் இருக்கும். "வலது தோளில் மச்சம்" இருந்தால், அத்தகையவர்கள் மிகவும் மனவுறுதி படைத்தவர்கள். எதற்கும் அஞ்சாதவர்கள். சண்டை சச்சரவுகளில் முன் வைத்த காலைப் பின் வைப்பதென்பது இவர்களுக்குத் தெரியாது. இவர்கள் பலம் மிக்க அறிவாளிகள். எப்பொழுதும் ஏதாவது ஒன்றைப் படிப்பதென்றாலும், ஏதாவதொரு புது விஷயத்தைக் கற்றுக் கொள்வதென்றாலும் இவர்களுக்கு விருப்பம் அதிகம்.போகங்கள் நிறையப் பெற்றவர்கள்.பிறருக்கு உதவி செய்வதாக வாக்களித்து விட்டால் அதைத் தவறாமல் நிறைவேற்றக்கூடியவர்கள். "இடது தோளில் மச்சம்" உள்ளவர்கள் உண்ணவும், உடுக்கவும் வசதி பெற்றிருந்தாலும், அமைதியாக இவர்களுக்கு வாழத் தெரியாது. அதாவது காரணத்தை வைத்துக்கொண்டு மற்றவர்களுடன் வாக்குவாதம் வீண் பிடிவாதம் செய்து கொண்டிருப்பார் குணத்தினால் பிறருடைய வெறுப்புக்கு ஆளாகி விடாதீர்கள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 03-06-2020
macham-palangal-machapuraanam
"தொப்புள் மீது மச்சம்" உள்ளவர்கள் கொஞ்சம் பணக்காரர்களாக இருப்பார்கள். வாழ்க்கைக்குரிய வசதிகள் இவர்களுக்குச் சாதாரணமாக இருக்கும். அளவுக்கு மீறிய பசியுள்ளவர்களாகவும், அப்பசியை ஆற்றிக் கொள்வதற்கு அடிக்கடி புசிப்பவர்களாகவும் இவர்கள் இருப்பார்கள். "தொப்புள் மீதே மச்சமில்லாமல் அந்த மச்சம் தொப்புளுக்கு சற்று கீழே இருக்குமாகில்", அத்தகையவர்கள் பல வகைகளில் பணம் ஈட்டுவார்கள் ஆனால் விதிவசமாக, அவர்கள் சேர்த்து வைத்த பண மெல்லாம் கொள்ளையடிக்கப்படும். அவர்கள் எந்த வேலையையும் துணிந்து செய்யாமல் யோசித்து யோசித்துத் தாமதமாகச் செய்வார்கள். ஆகவே, முயற்சிகள் நினைத்தபடி பலன் தரா. வீட்டில் தங்குவதைவிட வெளியூர்ப் பிரயாணங்கள் செய்வதென்றால் இவர்களுக்கு மிகவும் இஷ்டம். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 03-06-2020
macham-palangal-machapuraanam
"வலது தொடையில் மச்சம்" இருந்தால் அத்தகையவர்கள் பிறவியிலேயே செல்வந்தர்களாகப் பிறப்பர். இவர்களில் சிலர் துணிகள் நெய்யும் மில் அதிபர்களாகவோ, ஜவுளி வியாபாரம் செய்பவர்களாகவோ இருப்பர். இவர்களுக்குத் தாம் செய்யும் தொழில் மூலமாகவும், மனைவி மூலமாகவும் தனலாபம் உண்டு. வெளி நாடுகளைச் சுற்றியும் வருவர். இவர்களில் சிலர் குஸ்தி சண்டையில் வல்லவர்களாக இருப்பர். இவர்கள் பொதுவாக வாழ்க்கை குரிய சகல வசதிகளையும் பெற்று சுகமாக வாழ் நாட்களைக் கழிப்பார்கள். "இடது தொடையில் மச்சம்" உள்ளவர்கள் ஏழ்மையால் மிகவும் வருந்துவர். சாதாரண வாழ்க்கை நடத்துவதற்கே ஓடியாடி உழைக்க வேண்டியிருக்கும். இவர்களில் சிலர் முரட்டுத்தன 'மான காரியங்களைச் செய்தும், பிறரை இம்சித்தும் வாழ்க்கை நடத்துவர். சிறிதளவே வசதியுள்ளவர்களில் சிலர் வேசிலோலர்களாய்ச் சொத்துக்களை இழந்து வறுமையில் வாடி வருந்துவார்கள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 03-06-2020
macham-palangal-machapuraanam
தலையில் மயிர்களுக்கிடையே மச்சம் இருக்கக் கூடும். ஆனால், அவைகள் உள்ள இடத்தை மயிர்களை நீக்கிக் குறிப்பாகச் சோதனை செய்து பார்த்தால் தான் தெரியும். "தலையில் வலது பக்கத்தில் மச்சம்" இருந்தால், அவர்கள் அரசர்களாகவும், அல்லது அரசர்களுக் குரிய அதிகாரங்களையும் கடமைகளையும் கொண்ட தற்கால கவர்னர்கள், கலெக்டர்கள் போன்றவர்களாகவும் திகழ்வார்கள். "மேற்கண்ட மச்சம் தலையில் இடது புறத்தில் இருந்தால்" மக்களால் வணங்கப்படும் உயர்ந்த மடாதிபதிகளாகவோ, அஷ்டாங்க யோக வித்தையைக் கற்ற யோகிகளாகவோ திகழ்வார்கள். இல்லற வாழ்க்கையைக் காட்டிலும் துறவறம் மேற் கொண்டவர்களே இந்த மச்சத்துக்குரியவராவர். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 03-06-2020