"நாக்கு நுனியில் மச்சம்" இருந்தால், அத்தகையவர்கள் மிக்க அறிவாளிகளெனப் போற்றப்படுவர். அவர்கள் பேசும் பேச்செல்லாம் உண்மையாவும், அவர்கள் கூறும் வருங்காலக் கடந்த காலம் பலன்களெல்லாம் தவறாமல் பலனளிப்பனவாகவும் இருக்கும். இத்தகையவர்கள் ஜோதிட வித்தையை, கற்றவர்களாக இருந்தால் புகழும் நல்ல வருவாய் பெறுவார்கள். "நாக்கின் மேல் மச்சம்" இருந்தால் உலகப் புகழும் பேச்சாளியாகத் திகழ்வான் இவர்களில் சிலர் புராணப் பிரசங்கங்கள் செய்து வாழ்க்கை நடத்துவார்கள். இவர்களில் சிலர் மிகவும் மேதாவிகளாகவும் சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர்களாகவும் புகழ்பெற்றவர்கள். "நாக்கின் அடியில் மச்சம்" இருந்தால் உலகப வாழ்க்கையை வெறுத்த சன்னியாசிகளாகவோ ,அஷ்டாங்க யோகாப்பியாசம் செய்து, ஸித்தி பெற்ற மஹாயோகிகளாகவோ திகழ்வார்கள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.