1. வெண்டைக்காயில் பாஸ்பரஸ் சத்தானது அதிக அளவில் காணப்படுகிறது. உடல் வளர்ச்சிக்கு தேவையான உயர் சத்துக்கள் அனைத்தையும் வெண்டைக்காய் பெற்றுள்ளது. 2. மூளை இதயம் மற்றும் ஜீரண உறுப்புகளை பலப்படுத்தும் ஆற்றலானது வெண்டைக்காய்க்கு உண்டு. 3. வெண்டைக்காய் பிஞ்சுகளை சிறு குழந்தைகளுக்கு பச்சையாகவே உண்பதற்கு கொடுக்கலாம் ஞாபக சக்தியை அதிகரிப்பதில் இவை முக்கிய பங்காற்றுகின்றன. 4. முற்றாத வெண்டைக்காய் பிஞ்சுகளை கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும் ஆண்களுக்கு விந்து முந்துதல் பிரச்சனை சரியாகும். 5. கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகளை வெண்டைக்காய் தீர்க்கும் ரத்த உற்பத்திக்கு வெண்டைக்காய் பெரும் பங்காற்றுகிறது. 6. பொடுகுத் தொல்லை அதிகமாக இருப்பவர்கள் பிஞ்சு வெண்டைக் காய்களை நன்றாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர பொடுகு பிரச்சனையானது முற்றிலும் நீங்கும்.