1. பேச்சுவழக்கில் பூசணிக்காய் என்றழைக்கப்படும் சாம்பல் பூசணி ஆனது உடலிர்க்கு மிகுந்த குளிர்ச்சி அளிக்கும் காயாகும். 2. பூசணியின் விதைகளை நீக்கி அதன் தோலை நீக்கினால் வெண்மை நிற பருப்பு கிடைக்கும். இது மிகுந்த சக்தி நிறைந்தது உடலில் வறட்சி இருமல் மற்றும் பித்த மயக்கத்தைப் போக்கும். 3. நாடாப்புழுக்கள் வெளியேற்றம்: பூசணிக்காயின் விதைகளை 30 கிராம் அளவிற்கு எடுத்துக்கொண்டு அரைத்து அதனை தண்ணீரில் கலந்து சாப்பிட வேண்டும் சாப்பிட்ட ரெண்டு மணி நேரங்களுக்கு பிறகு ஆமணக்கு எண்ணெயை உட்கொண்டால் உடலில் உள்ள நாடாப்புழுக்கள் அனைத்தும் வெளியேறும். 4. வாய் நாற்றத்தைப் போக்கும் திறனானது பூசணிக்காய்க்கு உண்டு. உடல் பருமனை குறைப்பதோடு நரம்பு தளர்ச்சிக்கும் இன்றியமையாத மருந்தாக பூசணிக்காய் பயன்படுகிறது. 5. கட்டுக்கடங்காத காம உணர்ச்சியில் தவிப்பவர்கள் பூசணிக்காயின் சாறு எடுத்து சாப்பிட்டு வர காமத்தில் உள்ள நாட்டத்தை கட்டுப்படுத்தும். மூளையை அமைதிப்படுத்தி தெளிவு நிலைக்கு கொண்டுவரும். 6. இடைவிடாத ரத்த வாந்தி எடுத்துக் கொண்டு இருப்பவர்கள், பூசணிக்காயின் சாற்றுடன் சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர ரத்த வாந்தி நிற்கும் பூசணியின் சாற்றை தேனுடன் கலந்து குடித்து வந்தால் இருதயம் மற்றும் நுரையீரல் வீக்கம் குறையும். 7. பூசணிக்காய் ஆனது மனிதர்களின் உடல் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சி அடிப்பதோடு சிறுநீரை அதிகமாக வெளியேற்றும் தன்மையானது பூசணிக்காய்க்கு உண்டு. 8. இது சிறந்த மலமிளக்கியாக செயல்படுவதுடன் மட்டுமல்லாமல் நச்சு மருந்துகளால் ஏற்பட்ட வேக்காடு உடம்பிலுள்ள அலர்சி ,வேகம், கபம் ஆகியவற்றை சரி செய்யும்.