1. பரங்கிக்காயை சாப்பிடுவதன் மூலம் உடம்பிற்கு வலிமையும் சக்தியும் கொடுக்கும். உடல் பருமனை குறைக்கும் திறன் ஆனதும் பரங்கிக்காய்க்கு உண்டு. அலர்ஜி பித்தம் ஆகியவற்றை நீக்கும் சக்தியும் பரங்கிக்காய்க்கு உண்டு. 2. பரங்கிக்காய்கள் மற்றும் அதன் விதைகள் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. பரங்கிக்காய் சாறானது அழகு சாதனங்கள் தயாரிப்பதிலும் அழகு சிகிச்சையும் பயன்படுகின்றன. 3. பரங்கி காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் ஈரல் உபாதைகளை சரிசெய்யும். வெயில் காலங்களில் ஏற்படும் மயக்கம்களை குறைக்கும். கோடைகாலத்தில் உடம்பை குளுமையாக வைத்துக்கொள்ள பரங்கிக்காய் சாரு ஆனது உதவுகிறது. 4. முகத்தில் தோன்றிய வெள்ளை திட்டுக்களை நீக்குவதற்கு பரங்கிக்காய் சாற்றை தினமும் இட்டு வந்தால் நாளடைவில் காணாமல் போகும். 5. பல் சம்பந்தமான எந்த நோய்களை சரிசெய்யவும் பரங்கிக்காய் சாற்றைக் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் அனைத்து பிரச்சனைகளும் சரியாவதோடு பற்களின் வேர்கள் உறுதிப்படும். 6. மூல நோய்க்கு சிறந்த அருமருந்தாக பரங்கிக்காய் ஆனது பயன்படுகிறது. மேலும் சிறுநீர் உபாதைகளை பரங்கி விதை சரிசெய்யும் நாடாப்புழுக்களை வெளியேற்ற விதையானது பயன்படுகிறது. 7. கண்களில் புரை உள்ளவர்கள் பரங்கிக்காய் சாற்றை தண்ணீரில் கலந்து உட்கொண்டால் நல்ல பலனை அளிக்கும். 8. முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் நாள்பட்ட அழுக்கு சரியாக பரங்கிக்காய் சாற்றை பூசவேண்டும் ,தொடர்ந்து பூசி வர முகம் மிருதுவாகும்.