1. நாட்டில் பலர் கறிவேப்பிலையை சமையலிற்க்கு மனம் ஊட்டுவதற்கான பொருள் என்று நினைக்கின்றனர் . ஆனால் அது முற்றிலும் தவறு இதனை தாளித்து சமையலில் சேர்ப்பதன் மூலம் நறுமணம் மட்டுமல்லாது சமையலுக்கு ருசியும் உண்டாகிறது. 2. கறிவேப்பிலையுடன் மிளகு, சீரகம், சுக்கு மற்றும் உப்பு சேர்த்து நெய்யில் குழைத்த சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு சரியாகும். மேலும் மலக்கட்டு பிரச்சனை உள்ளவர்களுக்கும் இது நிவாரணம் தரும். வயிற்றில் உள்ள குடல் உறுதி பெறவும் இது பயன்படுகிறது. 3. கறிவேப்பில்லை யானது குளிர்ச்சித் தன்மை பொருந்தியது மனித உடலின் சூட்டை தணிக்கும் ஆற்றல் ஆனது கறிவேப்பிலைக்கு உண்டு அடிக்கடி ஏற்படும் தலைவலி மற்றும் தாகத்தை தணிக்கும்.