கர்ப்பிணி பெண்கள் முதல் மூன்று மாதம் உறங்கும் முறை. முதல் மூன்று மாதம் கர்ப்பிணிப்பெண்கள் மல்லாந்து படுக்கலாம். எந்த நிலையிலும் கவிழ்ந்து படுக்கக்கூடாது. கர்ப்பிணி பெண்கள் முதல் மூன்று மாதத்தில் இருந்து இடது பக்கம் ஒரு பக்கமாக சாய்ந்து படுக்க பழகிக்கொள்ளவேண்டும். இடது பக்கம் படுப்பதே குழந்தைக்கும் தாய்க்கும் ஆரோக்கியமானது. இடது பக்கம் தாய் படுப்பதால் குழந்தைக்கு தேவையான ரத்த ஓட்டம் செல்லும். கர்ப்ப காலம் செல்ல செல்ல இடதுபக்கம் படுப்பதால் குழந்தைக்கு தேவையான ஆரோக்கியம் மற்றும் குழந்தை கர்ப்பப் பையில் ஓடியாடி விளையாட தேவையான இடம் கிடைக்கும். இதனால் குழந்தையின் மனா மற்றும் உடல் வளர்ச்சி சீராக இருக்கும்.