உங்கள் முதல் மாதத்தில் கர்ப்ப காலத்தில் கர்ப்பப் பையினுள் ஒரு கருமுட்டை மட்டுமே இருக்கும். குழந்தையின் கரு முட்டை உங்கள் கையில் உள்ள சிறு மச்சத்தின் அளவில் மட்டுமே இருக்கும். இதனால் முதல் மூன்று மாதங்களுக்கு மிகவும் பாதுகாப்பாகவும் பாத்திரமாகவும் இருக்க வேண்டிய நேரமாகும். ஒரு சில கர்ப்பிணி பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படுகின்ற வயிற்றுவலி கருமுட்டை வளர்ச்சியின் போது இருக்கும்.கர்ப்பம் அடைந்ததை அறிந்த பிறகும் அடிவயிற்றில் வலி இருந்தால் உடனே மருத்துவரைச் சென்று பார்க்கவும்.சிறுநீரகத்தில் அதிகமாக தொற்று இருந்தால் அடிவயிற்றில் வலி ஏற்படும். உங்கள் முதல் மாதத்தில் டெஸ்டர் மூலம் மட்டுமே நீங்கள் கர்ப்பமாக இருப்பதை அறியமுடியும்.கர்ப்பம் அடைந்ததை அறிந்தவுடன் மருத்துவரை சென்று பார்ப்பது மிகவும் அவசியம். அதிக தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். முதல் மாதத்தில் வாந்தி மயக்கம் குறைவாக இருக்கும் ஒரு சிலருக்கு அதிகமாக இருக்கும் ஒரு சிலருக்கு வாந்தி மயக்கம் இரண்டாவது மாதத்திலிருந்து மட்டுமே துவங்க ஆரம்பிக்கும். மருத்துவர் உங்கள் உடல்நிலையைப் பரிசோதிக்க சிறுநீரக மற்றும் ரத்த பரிசோதனை பரிந்துரை செய்வார்கள் சிறுநீரகத்தில் ஏதாவது தொற்று இருந்தால் அதற்கு மருந்துகள் கொடுக்கப்படும் அதை தவறாமல் உண்பது அவசியம் இது கருவின் வளர்ச்சி மற்றும் கருவை பாதுகாக்கும். முதல் மாதத்தில் இருந்து இரும்புச் சத்து மற்றும் கால்சியம் மாத்திரைகளை மருத்துவர் கர்ப்பிணி பெண்களுக்கு கொடுப்பார். அவர்கள் அதை உட்கொள்வது அவசியம் இது குழந்தையின் வளர்ச்சி மற்றும் தாயின் உடல்நிலையில் உபாதைகளை சரி செய்யும். புரோட்டின் பவுடர் மருத்துவர் இதனை பரிந்துரை செய்வார் இதனை தவறாமல் தினமும் பாலில் கலந்து குடிப்பது அவசியம் இது குழந்தையின் வளர்ச்சி மற்றும் எடையை அதிகரிக்க உதவும்.உங்கள் முதல் மாதத்திலிருந்தே உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த பழங்கள் காய்கறிகள் இரும்பு சத்து நிறைந்த உணவுகள் கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.யோகா செய்வது சிறந்த மன அமைதியை உங்களுக்கு தரும். இச்சமயத்தில் மோர் இளநீர் தண்ணீர் பழச்சாறு அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். வாந்தி மயக்கம் இருப்பவர்கள் தண்ணீர் குடிக்க இயலவில்லை என்றால் மோர் இளநீர் பழச்சாறு அதிகமாக உட்கொள்வதன் மூலம் பனிக்குட நீர் அதிகரிக்கவும் சிறுநீர் தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும்.அதிக தண்ணீர் பருகுவதை நாம் சிறுநீர் கழிக்கும் போது அதன் வழியாக தொற்று வெளியேறிவிடும் இதனால் அதிக தண்ணீர் குடித்தால் சிறுநீர் தோற்றத்தில் இருந்து விடுபடலாம்.