1. துளசியை இடித்து சாறு இஞ்சியை இடித்துச்சாறும் எடுத்து சம அளவில் கலந்து குடிக்க ஜலதோஷம் நீங்கும். 2. தூதுவளை செடியில் ரசம் வைத்து, மதியம் நேரம் சாப்பிடுங்கள், ஜலதோஷம் ஓடும். 3. தலைவலி முள்ளங்கி சாறு சாப்பிட ஜலதோஷம் குணமாகும். 4. மாதுளை பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர ஜலதோஷம் இருமல் வராமல் கடுப்பதோடு உலர்ந்த சருமத்தை கட்டுப்படுத்தும் ஈறுகளை பலப்படுத்தும். 5. காய்ச்சல் விட்டவுடன் முதலில் தலைக்கு நீர்விட்டு கொள்பவர்கள் ஓமத்தை அரைத்து தலைக்கு தேய்த்து கொண்டு பின்னர் நீர்விட நீர்கோர்த்து கொள்ளாமல் இருக்கும். 6. திப்பிலி, கடுகு, ரோகினி, சீரகம், சுக்கு, மிளகு, வேப்பம் கொழுந்து சேர்த்து, அரைத்து நிழலில் காயவைத்து மாத்திரையாக்கி காலை, மாலை சாப்பிட ஜலதோஷம் குணமாகும். 7. வேப்பிலை கொழுந்து, சீரகம், மிளகு, சுக்கு, திப்பிலி, மை போல் அரைத்து மிளகு அளவு உருண்டையாக செய்து வைத்துக் கொள்ளவும், அல்லது காயவைத்து பொடி செய்து கொள்ளவும். 1/4 கிராம் அளவு பொடியை தேனில் கலந்து கொடுக்க ஜலதோஷம், மாந்தம் ஏற்படாது, ஜீரணசக்தியை கொடுக்கும். 8. சீரகத்தை பொன் வருவலாக வறுத்து பொடி செய்து கல்கண்டு சேர்த்து சாப்பிட இருமல் குணமாகும். 9. முருங்கை பிஞ்சுகளை நசுக்கி சாறு எடுத்து அந்த சாறுடன் தேன் கலந்து 2 வேளை வீதம் 3 நாட்கள் சாப்பிட ஜலதோஷம் குணமாகும். 10. துளசி ரசம் இஞ்சி ரசம் கலந்து குடித்தால் ஜலதோஷம் நீங்கும்.