1. குப்பைமேனி சாறு, சுண்ணாம்பு சேர்த்து அரைத்து தடவினால் வீக்கம் குணமாகும். 2. வேலி பருத்தி சாறு, சுண்ணாம்பு கலந்து கால்வீக்கத்திற்கு தடவி வர குணமாகும். 3. புங்கன் இலையை ஆமணக்கு எண்ணையில் வதக்கி வீக்கத்தின் மீது கட்டினால் வீக்கம் வாடி அகலும். 4. அடிபட்ட வீக்கம் குணமாக சுத்தி செடி இலைகளை அரைத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி அடிபட்ட வீக்கத்தின் மீது பற்று போட்டு வர அடிபட்ட வீக்கம் குணமாகும். 5. கண்டங்கத்திரி இலையை தண்ணீர் விட்டு அரைத்து பற்று போட்டால் வீக்கம் வற்றும். 6. சுக்கு, ஆவாரம்பட்டை சம அளவு எடுத்து 200 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆற வைத்து, தினசரி 2 வேளை சாப்பிட்டுவர கை கால் வீக்கம் போகும் 7. அமுக்கிரா கிழங்கை மைபோல் அரைத்து வீக்கத்தின் மேல் போட வீக்கம் குறையும். 8. சுக்கை நன்றாக அரைத்து கொதிக்க வைத்து மூட்டுகளில் பூசி வந்தால் மூட்டு வீக்கம் குறையும். 9. பிரண்டை சாறு, உப்பு, புளி சேர்த்து காய்ச்சிய தைலத்தை தடவி வந்தால் பூரண குணம் கிடைக்கும். 10. உடலில் எந்த நோய் வந்தாலும் முதலில் ஏற்படுவது வீக்கம் தான். அந்த வீக்கத்தை போக்க கரும்பவளத்தை நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து மைய அரைத்து வீக்கத்தின் மீது தடவி வர வீக்கம் உடனே குறையும். 11. கால்களில் வீக்கம் ஏற்பட்டால் உத்தாமணி என்னும் வேலிப்பருத்தியின் இலைச்சாற்றை எடுத்து வீக்கத்தின் மேல் தடவி வர வீக்கம் உடனே குறையும்.