1. கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும் முடி வளரும். 2. முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வரவும். தலைமுடி அடர்த்தியாகவும் கருப்பாகவும் ஆகும். 3. கேரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தேய்த்து வர முடி நன்றாக வளரும். 4. மருதாணி பூவை தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து வெயிலில் காயவைத்து தொடர்ந்து தேய்த்து வர வழுக்கை தலையில் முடி வளரும். 5. வழுக்கையில் முடி வளர வெங்காயம், செம்பருத்தி பூவுடன் சேர்த்து அரைத்து வழுக்கை மீது தடவிவர நல்ல பலன் கிடைக்கும். 6. நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவி வர முடிவளரும். 7. சடாமஞ்சளை நல்லெண்ணையில் காய்ச்சி வாரம் 1 முறை தலைக்கு தேய்த்து குளித்து வர முடி அடர்த்தியாகவும், நீண்டும் வளரும்.