1. நீலி என்னும் மூலிகையை அரைத்து சுண்டைக்காய் அளவு உள்ளுக்குச் சாப்பிட மாலைக்கண் நோய் குணமாகும். மருந்துண்ணும் நாளில் உப்பு புளியைச் சேர்த்தல் கூடாது.
2. மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, கீழாநெல்லி பொடி சம.அளவு கலந்து சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.
3. வேப்பங்கொழுந்து, ஓமம், உப்பு சேர்த்து அரைத்து தொடர்ந்து சாப்பிட்டு வா கண்ணிலிருக்கும் படலம் மறைப்பு அகலும், காமாலை, மாலை கண் புழுவெட்டு நோய்கள் அகலும்.
4. மாலைக்கண் நோயின் அறிகுறி தென்படும் போதே பப்பாளப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் வராது.