Weight-loss | | Tamil Best Beauty tips site | Laddu muttai உடல் எடையை குறைக்க பாட்டி வைத்தியம் weight-loss-in-tamil

உடல் எடையை குறைக்க பாட்டி வைத்தியம்

weight-loss-in-tamil

பலருக்கு உடல் பருமனாகும் மிகவும் கவலை தரக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. உடல் இளைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் பலரால் உடற்பயிற்சி தினந்தோறும் மேற்கொள்ள முடிவதில்லை. ஆனாலும் உடல் இளைக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குள் இருப்பது என்னவோ உண்மைதான். உடற்பயிற்சியும் செய்யாமல் விரைவாக உடல் இளைக்க வைக்க பாட்டி வைத்தியத்தில் வழி இருக்கிறது. பெரும்பாலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் மற்றும் நச்சுப் பொருட்கள் உடலில் சேர்வதாலேயே உடல் பருமன் ஆகிறது. உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குவதன் மூலமாக உடலினை இலைக்க வைக்கலாம். இப்படிப்பட்ட நச்சுகளை நீக்குவதற்காக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த ஒரு கசாயம் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பானத்தில் சோம்பு, மல்லி ,சீரகம் ஆகிய ஒன்று சேர்த்து பருகுவதன் மூலமாக உடல் எடையை குறைக்க முடியும். மேலும் இவை ஆரோக்கியமான உடலையும் மென்மையான சருமத்தையும் கொடுக்கவல்லது. கஷாயம் தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: அரை டீஸ்பூன் சோம்பு அரை டீஸ்பூன் மல்லி அரை டீஸ்பூன் சீரகம் தண்ணீர் ஒரு டம்ளர் இவை அனைத்தையும் இரவு தூங்கும் முன்பு ஒரு டம்ளர் நீரில் ஊற வைக்க வேண்டும். காலை எழுந்தவுடன் முதல் வேலையாக அந்த நீரை அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். பின்பு அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரை எலுமிச்சை பழத்தினை பிழிந்து விட்டு, தேவைக்கு ஏற்ப தேன் சேர்த்த பிறகு குடிக்க வேண்டும். இதனை தொடர்ச்சியாக சாப்பிட்டு வர பத்து நாட்களிலேயே உடல் எடையில் மாற்றம் தெரிவதை நம்மால் காண முடியும். குறிப்பு: கண்டிப்பாக காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில்தான் சாப்பிட வேண்டும்.




karbini-pengal-pictures
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மேல் வயிற்று வலி ஏற்படுவது என்பது சாதாரணமாக நிகழக் கூடிய ஒன்று.... இதனால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆறுமாதம் கடந்த கர்ப்பிணிகளுக்கு மேல் வயிற்றுவலி ஏற்படும் அல்சர் மற்றும் வாய்வு சேர்தல் உடல் சூடு போன்ற காரணங்களினால் இவை ஏற்படுகிறது தீர்வு: ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து சிறிது ஆறிய பின் குடித்தால் அஜீரணக் கோளாறு சரியாகும் ஒருவேளை அல்சரினால் வயிற்றில் புண் ஏற்படாமல் இருந்தால் ஒரு டம்ளர் பாலில் இரண்டு மூன்று பற்கள் பூண்டு போட்டு கொதிக்க வைத்து அதனை பூண்டோடு சேர்த்து சாப்பிட வேண்டும் இதனால் வாய்வு பிரச்சனையானது அடுத்த 30 நிமிடங்களுக்குள் சரியாகி மேல் வயிற்று வலியில் இருந்து முற்றிலுமாக நிவாரணம் தரும். ஒருவேளை அல்சரினால் வயிற்றில் காயங்கள் இருந்தால் இதை சாப்பிட கூடாது ஏனென்றால் பூண்டில் உள்ள காரத்தன்மை மேலும் புண்ணாக்கி தீராத வயிற்று வலியை உண்டுபண்ணும். உடல் சூட்டினால் ஏற்பட்ட வயிற்று வலியாக இருப்பின் வயிற்றில் விளக்கெண்ணெய் தேய்ப்பதன் மூலம் சரியாகும் காரமான உணவுகளை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது சிறந்தது.
Laddu Muttai | 05-06-2020
karbini-pen
கர்ப்பிணி பெண்கள் முதல் மூன்று மாதம் உறங்கும் முறை. முதல் மூன்று மாதம் கர்ப்பிணிப்பெண்கள் மல்லாந்து படுக்கலாம். எந்த நிலையிலும் கவிழ்ந்து படுக்கக்கூடாது. கர்ப்பிணி பெண்கள் முதல் மூன்று மாதத்தில் இருந்து இடது பக்கம் ஒரு பக்கமாக சாய்ந்து படுக்க பழகிக்கொள்ளவேண்டும். இடது பக்கம் படுப்பதே குழந்தைக்கும் தாய்க்கும் ஆரோக்கியமானது. இடது பக்கம் தாய் படுப்பதால் குழந்தைக்கு தேவையான ரத்த ஓட்டம் செல்லும். கர்ப்ப காலம் செல்ல செல்ல இடதுபக்கம் படுப்பதால் குழந்தைக்கு தேவையான ஆரோக்கியம் மற்றும் குழந்தை கர்ப்பப் பையில் ஓடியாடி விளையாட தேவையான இடம் கிடைக்கும். இதனால் குழந்தையின் மனா மற்றும் உடல் வளர்ச்சி சீராக இருக்கும்.
Laddu Muttai | 05-06-2020
karpam
கர்ப்ப காலத்தில் பெண்களின் மார்பு பகுதியில் இருந்து பால் போன்ற பிசுபிசுப்பான திரவம் வெளிப்படுவது இயற்கையானதே பால் சுரப்பிகள் அதிகம் உற்பத்தியாவதால் இத்தகைய நிலை ஏற்படுகிறது. எனவே இதை கண்டு பயப்பட வேண்டாம் இது முற்றிலும் குழந்தை நன்றாக இருப்பதற்கான மற்றும் உடல் நன்றாக இருப்பதற்கான அறிகுறி மட்டுமே. இருந்தாலும் அதிகமாக அப்படி பட்டுக்கொண்டே இருந்தால் உங்கள் உடல் பலவீனமாக ஆகும் வாய்ப்பு உள்ளது . எனவே நீங்கள் சோர்வாக உணர்ந்தீர்கள் என்றால் அதற்க்கு தகுந்தாற்போல உங்களுக்கு தேவையான உணவுகளை நீங்கள் எடுத்து கொள்ளுங்கள் . அதையும் தாண்டி உங்களுக்கு சோர்வாக இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
Laddu Muttai | 05-06-2020
laddumuttai
கருவுற்ற ஒவ்வொரு பெண்ணுக்கும் முதல் மூன்று மாதம் என்பது மிக முக்கிய காலமாக கருதப்படுகிறது. ஏனென்றால் குழந்தையின் தண்டுவட வளர்ச்சி மூளை வளர்ச்சி குழந்தையின் முழு உடல் வளர்ச்சியும் உருவாகக்கூடிய காலமாக இருப்பதால் இந்த காலத்தில்தான் பெண்களின் உடலில் நடக்கக்கூடிய ஹார்மோன் சென்சஸ் காரணமாக வாந்தி, மயக்கம், பசியின்மை போன்ற பிரச்சினைகளை சந்திப்பார்கள். இதன் காரணமாக எக்காரணத்தைக் கொண்டும் உணவை நாம் தடை செய்யக்கூடாது கண்டிப்பாக மிகக்குறைவாக சாப்பிட்டாலும் கூட முறையாக உணவு அருந்த வேண்டும். உணவு சத்தானதாகவும் ஆரோக்கியமானதாகவும் வயிற்றில் வளரக்கூடிய குழந்தையின் வளர்ச்சிக்கு தகுந்தாற் போலவும் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கு அவசியமான சத்துக்கள், 1. புரதம் 2. இரும்புச்சத்து 3. கால்சியம் 4. போலிக் அமிலம் 5. வைட்டமின் பி12 இந்த சத்துக்கள் குழந்தையின் ஆரம்பகால வளர்ச்சிக்கு மிகவும் அவசியமாக கருதப்படுகிறது.இந்த சத்துக்கள் நிறைந்த உணவுகளை நாம் தேர்ந்தெடுத்து உண்ணுதல் வேண்டும். அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள், 1. புரதம் முட்டையில் வெள்ளைக்கருவில் முழுமையாக புரதச்சத்து நிறைந்துள்ளது. நல்ல கொழுப்பு மற்றும் போலிக் அமிலம் கால்சியம் வைட்டமின் பி போன்ற சத்துக்களும் உள்ளன. ‌ காய்கறிகளில் உள்ள புரோட்டீன் சத்துக்கள்: பன்னீர், காளான், சோயா பீன்ஸ், பருப்பு வகைகள், பச்சை பட்டாணி, கருப்பு உளுந்து இந்த வகையான உணவுகளில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இந்த வகையான உணவுகளை தினசரி ஒரு உணவை சமைத்து சாப்பிடுவது நல்லது. 2. இரும்புச்சத்து காய்கறிகளில் முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஹீமோகுளோபின் அதிகமாக உற்பத்தி செய்ய இந்த முருங்கைக்கீரை உதவுகிறது. ரத்த அளவை அதிகரிக்கச் செய்யவும் கருவில் உள்ள குழந்தையின் ரத்த ஓட்டமும் சீராக இருக்கும். இரும்புச்சத்து மற்றொரு உணவு, ஈரல், சிக்கன் ஈரல் மட்டன் ஈரல் இதில் எதுவானாலும் நன்றாக சமைத்து எடுத்துக்கொள்வதன் மூலம் இரும்புச் சத்து நமக்கு கிடைக்கின்றது. 5 முதல் 100 கிராம் வரை அருந்தலாம். கர்ப்ப காலங்களில் ரத்த சோகை என்னும் அனிமியா வினால் பல பெண்கள் அவதிப்படுவார்கள் இதனால் பல பிரச்சனைகளும் ஏற்படும். புதிய இரத்தம் அதிகமாக உருவாகவும் நமக்கு தேவைப்படுவது இரும்புச்சத்துக்கள் தான். ஈரல் வகைகளில் ஏதாவது ஒரு ஈரல் வகைகளை நன்றாக சமைத்து நாம் எடுத்துக் கொள்வதன் மூலம் கற்ப காலங்களில் வரும் அனிமியா பிரச்சனைகளை தடுக்கலாம். வாரம் மூன்று முறை இதனை சாப்பிடலாம். 3. கால்சியம் ஒரு கப் பாலில் 300 கிராம் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இது குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு அவசியமாக உள்ளது. தினசரி ஒன்று அல்லது இரண்டு டம்ளர் பால் குடிப்பது நல்லது. காய்கறிகளில் உள்ள கால்சியம் சத்துக்கள் ‌‌: காலிஃப்ளவர், வெண்டைக்காய், முட்டைக்கோஸ். இதனை தினசரி ஒரு காய்கறிகளை சமைத்து சாப்பிடுவது நல்லது. தண்ணீர்: கர்ப்ப காலங்களில் தினசரி 3 லிட்டரிலிருந்து 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். குழந்தையைச் சுற்றியுள்ள பனிக்குடத்தில் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதற்கும் தண்ணீர் மிக அவசியம். அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும். கேரட் , பீட்ரூட் குழந்தையின் கண் வளர்ச்சிக்கு நல்லது. மாதுளை பழத்தை வெறும் வயிற்றில் ஜூஸ் செய்து குடிப்பதனால் ரத்த அளவை உற்பத்தி செய்ய உதவுகிறது. விதை உள்ள மாதுளையை சாப்பிடுவது நல்லது. சாத்துக்கொடி ஆரஞ்சு நெல்லிக்காய் திராட்சை கொய்யா பழம் போன்ற பழங்களை சாப்பிடுவது நல்லது. இளநீர் இளநீர் நீர்ச்சத்து குறையாமல் இருக்க உதவுகிறது. வாந்தி பசியின்மை சோர்வு இதனை குணமாக்க இளநீர் பயன்படுகிறது. நட்ஸ்:(வைட்டமின் சத்துக்கள்) பாதாம், முந்திரி, வேர்க்கடலை இவைகளில் வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. எல்லா காய்கறிகளையும் சூப் வைத்து குடிப்பது நல்லது இரவில் டீ அல்லது காபி க்கு பதிலாக இதனை அருந்தி வருவது நல்லது.
| 31-05-2020
laddumuttai

Tag : skin-care |

காயம்பட்ட இடத்தில் ஏற்கனவே இருந்த சருமம் சேதமாகி இருக்க புதிதாக செல்கள் வளரும் போது அந்த இடத்தில் புரோட்டின் அமைப்பு மாறுபடுவதால் தழும்பாக தனித்து தெரிகிறது. அதை இயற்கையான பொருட்கள் கொண்டு சரி செய்யும் வழிகள். இதற்கு தேவையான பொருட்கள், கசகசா, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள், மூன்றையும் உங்களுக்கு தேவையான அளவு எடுத்துக்கொண்டு நன்றாக சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பின்னர் உடலில் எங்கு எங்கு தழும்புகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் இதனை தடவிவந்தால் விரைவில் தழும்புகள் மறையும். கற்றாழை ஜெல்லை தடவி வருவதன் மூலமும் தழும்புகள் விரைவில் குணமடையும்.
| 31-05-2020
papaya-laddumuttai

Tag : Fruit-facts |

பப்பாளி பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் எ ,காப்பர் பாஸ்பரஸ் பொட்டாசியம் இரும்பு நார்ச்சத்துகள் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன. பப்பாளி பழத்தை நாம் உண்பதனால் செரிமான நோய்களை குணப்படுத்துவதோடு மலச்சிக்கலைப் போக்கும் ஆற்றல் வாய்ந்தது. இந்த பப்பாளி பழம் ரத்த சோகை என்னும் நோயை குணப்படுத்தும். வயிற்றுப்போக்கு, நெஞ்சு எரிச்சல், அல்சர், சர்க்கரை வியாதி, கண் பார்வை கோளாறு போன்றவற்றிற்கு சிறந்த மருந்து. வறண்ட மேல் தோலை அகற்றி புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி இதற்கு உண்டு. முகம் பளபளப்பாக இருக்கவும் இந்த பழம் மிகவும் பயன்படுகிறது. குழந்தைகளுக்கு பப்பாளிப் பழத்தை உண்ண கொடுப்பதனால் எலும்புகள் , பற்கள் உறுதியாகிறது. பெண்கள் இதை உண்பதனால் மாதவிலக்கு சீராகும். ஆண்களின் உயிரணு உற்பத்தி திறனை அதிகரிக்கும் அற்புத சக்தி இப்பழத்திற்கு உண்டு. குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த பழத்தை உண்ண கூடாது.
| 30-05-2020
image

Tag : சளி |

தண்ணிரில் சிறிதளவு பணங்கற்கண்டு,இஞ்சி,லவங்கம் சேர்த்து கொதிக்க விட்டு பிறகு ஏலக்காய்,12மிளகு,1ஸ்பூன் சிரகம்,இந்த மூன்றையும் அரைத்து எடுத்து கொதிக்கும் அந்த தண்ணிரில் சேர்த்து அதில் சேர்த்த அனைத்து பொருட்களும் நன்றாக ஒரு டமளர் வரும் வரை கொதிக்க விடவும்.பிறகு இதனை இரவில் குடித்து வந்தால் சளி காலையில் மலம் வழியாக வெளியேறும்.
| 29-05-2020