moolam | | Tamil Best Beauty tips site | Laddu muttai மூல நோய் தீர சாப்பிட வேண்டிய காய்கறிகள் moola-noi-theera

மூல நோய் தீர சாப்பிட வேண்டிய காய்கறிகள்

moola-noi-theera

1. பீட்ரூட்: பீட்ரூட்டில் உள்ள செல்லுலோஸ் ஆனது இலகுவாய் மலம் கழிக்க உதவும். நாள்பட்ட மலச்சிக்கலை தீர்த்துவைக்கும் சுபாவம் பீட்ரூட்டிற்க்கு உண்டு. ஆசன வாய் அருகே வீக்கம் ஏற்படுவதை தடுக்கும் இரவு படுக்கைக்கு செல்லும் முன் அரை முதல் ஒரு டம்பளர் வரை பீட்ரூட் கசாயம் பருகினால் நல்லது. 2. பாகற்காய்: பாகற்காய் இலையானது மூலநோய் பிரச்சனைக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மூன்று தேக்கரண்டி பாகற்காய் இலை சாறுடன் ஒரு கிளாஸ் மோர் கலந்து குடித்துவர மூலநோய் தீரும். ஒரு மாதம் முழுக்க தினமும் ஒரு டம்பளர் பருகிவர சிறந்தது. 3. வெங்காயம்: 30 கிராம் வெங்காயத்தை தண்ணீரில் உரசி 60 கிராம் அளவிற்கு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர மூல வியாதி குணமாகும் தினமும் இரண்டு முறையாவது சில நாட்கள் வரை சாப்பிடவேண்டும். 4. முள்ளங்கி: காலை மற்றும் மாலை வேளைகளில் 60 முதல் 90 மில்லி வரை முள்ளங்கி சாறு சாப்பிட்டுவர மூலம் கட்டுக்குள் வரும்.




thakkali-payangal-in-tamil

Tag : vegetable |

1. தக்காளியானது நம்முடைய சிறுநீரகத்தை மென்மையாக மற்றும் இயல்பாக நிலைக்கு ஊக்குவிக்கிறது. 2. உடம்பில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற பயன்படுகிறது. 3. வயிற்றுக்கடுப்பு பிரச்சனைக்கு பூண்டு மற்றும் எலுமிச்சை சாற்றுடன் தக்காளியை சேர்த்து உட்கொள்ள வேண்டும். 4. தக்காளியானது உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடிய ஒன்றாகும் வயிற்றுக் கோளாறு மற்றும் ஈரல் சம்பந்தமான கோளாறுகளில் மிக்க குணம் அளிப்பதாக செயல்படுகிறது. 5. தக்காளியை அதிகம் சேர்த்துக் கொண்டு வந்தால் உடல் உறவில் நாட்டம் குறைந்துவிடும். 6. தக்காளியானது வயிற்றில் ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டை சீர்படுத்தும் நாள்பட்ட வயிற்று நோய்களை சரி செய்யும் பலமானது தக்காளிக்கு உண்டு மேலும் ரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்யும். 7. மந்தமான ஈரலை ஊக்குவிப்பதற்கு தக்காளியில் உள்ள அயன் சத்தும் பொட்டாசியம உப்புக்களும் பெரும் பங்காற்றுகின்றன அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கு உபாதைகளை சரிசெய்யும். 8. தக்காளியை சாறு பிழிந்து அதனுடன் தேன் கலந்து பருக உடலில் ரத்தம் சுத்தம் படம். 9. தக்காளி நன்றாக வேகவைத்து காயம்பட்ட இடத்தில் வைத்துக் கட்டி வர காயமானது விரைவில் குணமாகும். 10. இதில் விட்டமின் ஏ சத்துக்கள் அதிகம் நிறைந்திருப்பதால் கண் சம்பந்தமான எந்த பிரச்சினை உள்ளவர்களும் இதை பயன்படுத்துவதால் பிரச்சினைகளிலிருந்து விடுபட வாய்ப்பு அதிகம்.
Laddu Muttai | 10-06-2020
thoothuvalai-payangal-in-tamil

Tag : vegetable |

1. தூதுவளையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நினைவாற்றலை அதிகரிக்கச்செய்யும் இருமல் மற்றும் கபம் ஆகியவற்றை நீக்கும். 2. உடலானது இளைத்துப் போய் கொண்டிருந்தால் தூதுவளையை நசியம் செய்து சாப்பிட்டு வர சரியாகும். 3. பால்வினை நோயான மேக நோய்க்கு இது சிறந்த மருந்தாகும். எலும்புருக்கி நோயை குணப்படுத்த தூதுவளை அளவு பயன்படுகிறது. 4. பசி உணர்வு தூண்டப்படும் எதற்கு பயன்படுகிறது 5. ஆஸ்துமா குணமாக தீர்க்கும் பயன்படுகிறது 6. காசம் மற்றும் இருமல் அதிலிருந்து விடுபட தூதுவளை இலை கசாயம் தயாரித்து சாப்பிட்டு வர சரியாகும் 7. காது அடைப்பு நீங்குவதற்கு தூதுவளை இலை சாற்றை பிழிந்து காதில் விட்டு வர காது அடைப்பு சரியாகும் 8. உடம்பின் வலியை நீக்குவதோடு தூதுவளை இலை ஜீரணத்தை எளிதாக்கும் சக்தி அதற்கு உண்டு
Laddu Muttai | 10-06-2020
soya-beans-payangal-in-tamil

Tag : vegetable |

சோயா பீன்ஸில் மற்ற காய்கறிகளை விட அதிகமாகவும் இறைச்சி பால் மற்றும் முட்டை இவற்றிற்கு சமமாகவும் புரதச் சத்து உண்டு. சோயா பீன்ஸில் புரதச் சத்துக்கள் மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. சோயாபீன் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் 1. எடை பெருக்கத்திற்கு உதவுகிறது 2. மலச்சிக்கலை நீக்கும் 3. குடலின் ஆரோக்கியத்தை பராமரிக்கும் 4. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 5. சர்ம கோளாறுகளை சரி செய்யும் 6. ரத்த சோகையை தடுக்கும்
Laddu Muttai | 10-06-2020
avarakkai-payangal-in-tamil

Tag : vegetable |

அவரைக்காயை பிஞ்சாக இருக்கும் பொழுது தோல் பகுதியுடன் சேர்த்து உண்ண தகுந்தது, முற்ற விட்டாள் விதைகள் மட்டுமே மிஞ்சும். அவரையில் இரும்பு சத்தானது அதிகமாக காணப்படுகிறது எனவே கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு சிறந்த உணவாக அமையும். அவரை இலைச் சாற்றுடன் சிறிது சுண்ணாம்பு மற்றும் ஆமணக்கு எண்ணெய் கலந்து குழைத்து காயத்தில் பூசிவர உடலில் ஏற்பட்ட புண் ஆறும். இவற்றுடன் கற்கண்டு பொடி சேர்த்து கொட்டைப் பாக்கு அளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். வாதம் சம்பந்தமான நோயாளிகளுக்கும் கண்களில் கோளாறு உள்ளவர்களுக்கும் பிஞ்சு அவரைக்காய் சமையல் செய்து கொடுக்க நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அவரையே தொடர்ந்து சாப்பிட்டு வர கபம், வாதம், பித்தம் சம்பந்தமான நோய்கள் அறவே நீங்கும்
Laddu Muttai | 10-06-2020
mullangi-payangal-in-tamil

Tag : vegetable |

முள்ளங்கியை உணவில் சேர்த்துக்கொள்வதால் பசியை தூண்டும் மற்றும் ரத்த ஓட்டத்தை ஆரோக்கியமாக்கும். இதனுடைய இலை கிழங்கு விதை என்று அனைத்துமே மருத்துவத்தில் பயன்படக்கூடிய ஒன்றாகும். கிழங்கானது சொறி கரப்பான் வராமல் தடுக்கும். விதைகள் ஆனது கபத்தை வெளியேற்ற உதவும் ஏற்படும் அசௌகரியங்களை நீக்கும். முள்ளங்கியின் நிலையானது சிறந்த மலமிளக்கியாக செயல்படும் மேலும் சிறுநீரை பெருக்கும். முள்ளங்கி சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் 1. மூலத்தை சரி செய்யும் 2. பிறப்புறுப்பு மற்றும் சிறுநீர் உபாதைகள் சரி செய்யும் 3. மார்பு சம்பந்தமான தொல்லைகள் சரிசெய்யும் 4. மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்து 5. வெண் திட்டுகளை போக்கும்
Laddu Muttai | 10-06-2020
urulai-kilangu-payangal-in-tamil

Tag : vegetable |

உருளைக்கிழங்கில் இருந்து முழுமையான சத்துக்களை பெற உருளைக்கிழங்கைத் தோல் சீவாமல் சமைக்கவேண்டும் பெரும்பாலான சத்துக்கள் கிழங்கின் தோலை ஒட்டியே காணப்படுகின்றன. மனித உடம்பில் உள்ள காரச் சத்து பராமரிப்பதில் உருளையானது முக்கிய பங்காற்றுகிறது அதிகப்படியான அமிலம் உடலில் சேர்வதால் ஏற்படும் நச்சுத்தன்மையை உருளைக்கிழங்கு சரி செய்கிறது இது ஒரு சிறந்த நச்சு முறிப்பானாக பயன்படுகிறது. நீர் கொழுப்பு உடலில் உள்ள நச்சுத்தன்மை யூரிக் அமில நோய் நாள்பட்ட மலச்சிக்கல் இந்த நோய்களுக்கு உருளை மட்டுமே உணவாகக் கொண்டால் சிறந்த பலனை தரும். உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் 1. சொறி கரப்பான் வியாதிகளுக்கு சிறந்த மருந்து 2. கீழ்வாயு சரிசெய்யும் 3. ஜீரண மண்டல கோளாறுகளை சரி செய்யும் 4. சரும குறைபாடுகளை சரிசெய்யும் 5. வீக்கத்தை குறைக்கும்
Laddu Muttai | 10-06-2020
pasalai-keerai-payangal-in-tamil

Tag : vegetable |

பசலைக்கீரை சாப்பிடுவதன் மூலம் சக்தி குறைவு மற்றும் ஆண்மை கோளாறுகளை சரி செய்யலாம். மேலும் ரத்த சோகை நரம்பு சோர்வு நரம்பு பலவீனம் இவற்றைப் போக்குவதிலும் பசலைக்கீரை வல்லது. பசலைக் கீரையில் அயர்ன் சத்து அதிகமாக உள்ளது எனவே கர்ப்பிணி பெண்களுக்கு இவை புதையல் போன்றது. பசலைக் கீரையின் சாற்றை எடுத்து வாய் கொப்பளித்து வர தொண்டை பின்பற்றும் எரிச்சலானது விரைவாக சரியாகும். பசலைக் கீரை சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் 1. மலச்சிக்கலை சரிசெய்யும் 2. பார்வைக்கோளாறுகளுக்கு உகந்தது 3. ரத்த சோகையை தடுக்கும் 4. பல் உபாதையை சரிசெய்யும் 5. சிறுநீர் கோளாறுகளை சரி செய்யும் 6. சுவாசக் கோளாறுகளை சரிசெய்யும் 7. தாது விருத்தியாகும்
Laddu Muttai | 10-06-2020