moolam | | Tamil Best Beauty tips site | Laddu muttai மூல நோய் தீர சாப்பிட வேண்டிய காய்கறிகள் moola-noi-theera

மூல நோய் தீர சாப்பிட வேண்டிய காய்கறிகள்

moola-noi-theera

1. பீட்ரூட்: பீட்ரூட்டில் உள்ள செல்லுலோஸ் ஆனது இலகுவாய் மலம் கழிக்க உதவும். நாள்பட்ட மலச்சிக்கலை தீர்த்துவைக்கும் சுபாவம் பீட்ரூட்டிற்க்கு உண்டு. ஆசன வாய் அருகே வீக்கம் ஏற்படுவதை தடுக்கும் இரவு படுக்கைக்கு செல்லும் முன் அரை முதல் ஒரு டம்பளர் வரை பீட்ரூட் கசாயம் பருகினால் நல்லது. 2. பாகற்காய்: பாகற்காய் இலையானது மூலநோய் பிரச்சனைக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மூன்று தேக்கரண்டி பாகற்காய் இலை சாறுடன் ஒரு கிளாஸ் மோர் கலந்து குடித்துவர மூலநோய் தீரும். ஒரு மாதம் முழுக்க தினமும் ஒரு டம்பளர் பருகிவர சிறந்தது. 3. வெங்காயம்: 30 கிராம் வெங்காயத்தை தண்ணீரில் உரசி 60 கிராம் அளவிற்கு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர மூல வியாதி குணமாகும் தினமும் இரண்டு முறையாவது சில நாட்கள் வரை சாப்பிடவேண்டும். 4. முள்ளங்கி: காலை மற்றும் மாலை வேளைகளில் 60 முதல் 90 மில்லி வரை முள்ளங்கி சாறு சாப்பிட்டுவர மூலம் கட்டுக்குள் வரும்.




pattani-maruthuva-payangal

Tag : vegetable |

பட்டாணி ஆனது நமது உணவுப் பட்டியலில் காய்கறியாகவும் பருப்பு வகையாகும் பயன்படும். ஊட்டச்சத்து நிறைந்த பட்டாணி அளவு எளிதில் ஜீரணமாகக்கூடிய புரதங்களை அதிக அளவில் கொண்டுள்ளது. மேலும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் கணிசமான அளவில் பட்டாணியில் காணப்படுகின்றன. பட்டாணி ஆனது மனிதர்களின் உடல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. ரத்தத்தை விருத்தி செய்யும் பங்கானது பட்டாணிக் இயல்பாகவே உள்ளது. விடாமல் வரும் இருமலுக்கு மருந்தாகவும் பித்த மயக்கத்திற்கு மருந்தாகவும் அமையும். பசியுணர்வைத் தூண்டுவதில் பட்டாணி யானது முக்கிய பங்காற்றுகிறது.
Laddu Muttai | 11-06-2020
sakkaravalli-kilangu-maruthuva-payangal

Tag : vegetable |

1. சர்க்கரைவள்ளிக் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர வயிற்றில் உள்ள குடல் கோளாறுகளை சரி செய்யும் ஆற்றல் உண்டு. 2. மேலும் நாள்பட்ட மலக்கட்டை யும் குடல் பூச்சிகளையும் வெளியேற்றும் ஆற்றலானது சர்க்கரைவள்ளிக்கிழங்கு உண்டு. 3. சக்கரவள்ளி கிழங்கு எப்பொழுதும் அளவுக்குமீறி சாப்பிடக் கூடாது அதிகமாக சாப்பிடும் பொழுது வாந்தி மற்றும் பேதி உண்டாகும். 4. ரத்தசோகை உள்ளவர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிட்டுவர பூரண குணமடையும். 5. சிறுநீர் சம்பந்தமான உபாதைகளை குணமாக்கும் உடல் எரிச்சலைத் தணிக்கும் தன்மையானது சக்கரவள்ளி கிழக்கிற்கு உண்டு
Laddu Muttai | 11-06-2020
kovaikaai-maruthuva-payangal

Tag : vegetable |

1. கோவைக்காய் அல்லது கோவை பழத்தின் வேர்கிழங்குகள் இனவிருத்திக்கு பயன்படுகின்றன. 2. கோவைக்கிழங்கு சாற்றை 1 அல்லது 3 கரண்டி தர நீரிழிவு நோயானது கட்டுக்குள் இருக்கும். 3. கோவைக்காயை மோரில் ஊற வைத்து வற்றலாகக் செய்து சாப்பிட்டு வர சிறுநீர் கோளாறுகள் சரியாகும். 4. கோவைக்காய் கூட்டு அல்லது பொரியல் செய்து சாப்பிட்டு வர நாக்கிலுள்ள வெடிப்புகள் மற்றும் வாயில் எங்கு புண் இருந்தாலும் விரைவாக குணம் அடையும். 5. கோவை இலை சாறுடன் நீர் சேர்த்து கொதிக்கவிட்டு பருகிவர உடல் சூடு தணியும் உடம்பில் உள்ள குறைகளை அகற்றும் நிலை நிறுத்தும் ஆற்றலானது கோவை சாற்றுக்கு உண்டு.
Laddu Muttai | 11-06-2020
kothavarangai-maruthuva-payangal

Tag : vegetable |

1. கொத்தவரங்காய்க்கு எப்பொழுதும் நோய் தீர்க்கும் தன்மையானது குறைவு. பத்தியம் இருந்து சாப்பிடுவோர் கொத்தவரங்காயை உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் பத்தியம் முறிவு உண்டாகும் எடுத்துக்கொண்ட மருந்து வேலை செய்யாமல் போகும். 2. வாதம் மற்றும் பித்தம் உள்ளவர்கள் இதனை சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு உள்ள பிரச்சனைகளை இது அதிகப்படுத்தும். அதனால் அதை விட்டு எட்டக்க இருப்பதே சிறந்தது. 3. கொத்தவரங்காய் சாப்பிட்டுவர எலும்பு மற்றும் பல்லானது உறுதிப்படும் .பித்தமயக்கம் ஏற்படுவதை தடுக்கும் மாலைக்கண் நோயை குணப்படுத்தும்.
Laddu Muttai | 11-06-2020
kaliflower-maruthuva-payangal

Tag : vegetable |

காலிஃப்ளவர் எப்பொழுதும் சமைக்காமல் சாப்பிடக்கூடாது, எப்பொழுதும் சமைத்து சாப்பிடுவதே சிறந்தது. பெரும்பாலும் முட்டைகோஸில் உள்ள அதே சத்துக்கள் காலிபிளவரிலும் உண்டு.காலிஃப்ளவரை எப்பொழுதும் பிரதான உணவாக எடுத்துக் கொள்ளக்கூடாது அதையும் மீறி சாப்பிட்டால் குரல்வளையில் வீக்கம் உண்டாகும் இயல்பான அளவு சாப்பிடும் போது மட்டும்தான் அதற்குண்டான நற்பயன்கள் அனைத்தும் உடலுக்கு கிடைக்கும். காளிபிளவர் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் 1. குடல் பாதையை சுத்தப்படுத்தும் 2. மலச்சிக்கலை சரிசெய்யும் 3. வயிற்றுப்புண்ணை ஆற்றும் 4. எடை குறைப்பிற்கு பயன்படுகிறது 5. சர்ம கோளாறுகளை சரி செய்கிறது
Laddu Muttai | 11-06-2020
karunai-kilangu-payangal-in-tamil

Tag : vegetable |

1. கருணைக்கிழங்கை வாங்கும்போது புதிய கிழங்காக வாங்கக்கூடாது. ஏனென்றால் கருணைக்கிழங்கானது நமைச்சல் உள்ளது. புதிய கிழங்கை வாங்கும்போது நமைச்சல் அதிகமாகும். 2. சொறி, சிரங்கு ,கரப்பான் போன்ற சரும பிரச்சனைகளை சரி செய்யும் ஆற்றல் கருணைக்கிழங்கு உண்டு 3. கருணைக்கிழங்கை லேகியம் செய்து சாப்பிட்டு வர மூலம் நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படும். 4. கருணைக்கிழங்கானது ரத்தத்தை விருத்தி செய்யவும் ,ஜீரண உறுப்புகளை சுத்தப்படுத்தவும், மலச்சிக்கல், வயிற்று எரிச்சல் ,வயிற்றுவலி, மூலம் ஆகிய வியாதிகளுக்கு சரியான மருந்தாக அமையும்.
Laddu Muttai | 10-06-2020
kathirikai-payangal-in-tamil

Tag : vegetable |

1. கத்திரிக்காயை எப்போதும் அதிகமாக உட்கொள்ளக் கூடாது ஏனெனில் உடம்பில் சொறி அரிப்பு மற்றும் சிரங்கு உண்டாகும். 2. கத்திரிக்காயில் உடம்பில் பசியை தூண்டும் ஆற்றலானது அதிக அளவில் உள்ளது. இது ரத்தத்தை சுத்திகரிப்பது மட்டுமல்லாமல் சிறுநீர் கழிக்கும்போது கடுகடுப்பு இருந்தால் அதை சரி செய்யும். தொடர்ந்து சாப்பிட்டுவர இருமலுக்கு சிறந்தது. 3. வெப்ப காலங்களில் ஏற்படும் மலச்சிக்கலுக்கு கத்திரிக்காய் ஆனது சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது பிள்ளைகளை ஈன்ர கர்ப்பிணிப் பெண்கள் பத்திய உணவிற்காக கத்திரிக்காயை சேர்த்து கொள்ளலாம். 4. வாதம் பித்தம் கப தோஷங்கள் ஆகியவற்றால் வரும் தொந்தரவுகளை நீக்கி உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் .நாள்பட்ட கோடழ கட்டு எளிதில் குணமாக கத்திரிக்காயானது உதவும்.
Laddu Muttai | 10-06-2020