1. அத்திபழம் தேனில் ஊறவைத்து சாப்பிட மாதவிடாய் வயிற்று வலி குறையும். 2. 30 கிராம் பெருங்காயம் 6 கிராம் பனை வெல்லம் சேர்த்து மாதவிடாய் காலத்திலிருந்து 5 நாட்கள் வரை சாப்பிட்டு வந்தால் வலியுடன் வரும் விலக்கு குணமாகும். 3. வெள்ளெருக்கு சீரகம், மிளகு சேர்த்து அரைத்து குடிக்க பெண்கள் மாதவிடாய் வலி குணமாகும். 4. புதினா இலையின் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடிக்க மாதவிடாய் ஒழுங்காகும். 5. மலைவேம்பு விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து மாதவிடாய் காலத்தில் 3 நாள் உண்ண மாதவிடாய் வலி இல்லாமல் இருக்கும். இந்த எண்ணை வெறும் வயிற்றில் நீராகரத்துடன் சாப்பிட வேண்டும். 6. பெண்கள் தங்களுடைய மாதவிடாய் நாட்களுக்கு ஒரு வாரம் முன்னர் தினசரி நாவல் பழத்தைச் சாப்பிட்டு வர மாதவிடாய் நாள் தள்ளிப் போகும் 7. பெண்கள் மாதவிடாய் காலங்களில் வயிற்று வலி ஏற்படும். அந்நாளில் எலுமிச்சம்பழச்சாறு சாப்பிட்டு வர வலி நின்று விடும். 8. வாழைப்பழம், ஏலக்காய் பொடி செய்து பிசைந்து சாப்பிட பெரும்பாடு கட்டுப்படுத்தும். 9. வல்லாரை இலை உத்தாமணி இலை நிழலில் காய வைத்து பொடியாக்கி கொள்ளவும். வெந்நீரில் 1 ஸ்பூன் கலந்து நான்கு நாட்கள் சாப்பிட வலி வராது 10. பருத்தி இலைசாறை பசும்பாலில் கலந்து பருக பெண்களுக்கு பெரும்பாடு நீங்கும். 11. தென்னமர பூக்களை உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொண்டு நாயுருவி செடியை எடுத்து சுத்தம் செய்து இரண்டையும் சேர்த்து மைபோல் அரைத்துச் சாப்பிட்டு வர இரண்டு நாட்கள் குணமாகும். 12. பருத்தி இலையை பறித்து வந்து கழுவி சுத்தம் செய்து இடித்து சாறு எடுத்து அந்தச்சாறுடன் சிறிது பசும் வெண்ணெய் கலந்து சாப்பிட்டு வர உடன் குணமாகும்.