1. சப்பாத்திப்பூ இலையை சுத்தம் செய்து கட்டிகளின் மீது போட கட்டி உடைந்து குணமாகும். 2. கிரந்தி நாயகம் என்ற செடியின் இலையை அரைத்து கட்டியின் மீது கட்டி அல்லது பூசிவரும். கட்டி பழுத்து உடையும். 3. துத்தி இலையை நல்லெண்ணையில் தடவி வாட்டி பொறுக்கும் சூட்டில் கட்டி மேல் ஒட்டும்படி வைத்து கட்டவும். கட்டி பழுத்து உடையும். 4. சப்பாத்தி கள்ளி பூக்கள் இலையை நசுக்கி கட்டியின் மீது கட்டு போட உடைந்து விடும். 5. உடலில் கட்டிகள் உள்ள இடத்தில் எருக்கம்பாலை தடவி வந்தால் கட்டிகள் உடன் ஆறும். 6. சோப்பு, மஞ்சள், உப்பு இம்மூன்றையும் மைய அரைத்து கட்டிகள் மீது போட்டு ஒரு சிறிய துணி ஒன்றைச் சதுரமாகக் கிழித்து அதன் மீது போட்டு 8 மணி நேரம் கழித்து எடுத்தால் கட்டி உடைந்து விடும். 7. அந்தி மந்தாரை இலையின் மீது விளக்கெண்ணெய் தடவி அனலில் சூடுகாட்டி கட்டிகள் மீது வைத்து கட்ட கட்டி குணமாகும். 8. பச்சரிசி மாவை நீர்விட்டு அதனுடன் சிறிது மஞ்சளையும் போட்டு மைய அரைத்து சூடு ஏற்றி சூடு தாங்கும் அளவு எடுத்து கட்டிகளின் மீது வைத்துக் கட்ட கட்டிகள் குணமாகும். 9. எந்த வகையான கட்டியானாலும் பழுத்து உடைய எருக்கன் செடியின் பின்புறம் விளக்கெண்ணெய் தடவி தணலில் காப்பு கட்டி மேல் வைத்து கட்டினால், கட்டி பழுத்து உடையும்.