இடது மார்பில் மீது கருப்பு மச்சம் ஒன்றிருந்தால், அது நன்மை தராது. சிறு வயதில் திருமணமாகி ஒரு மகனைப் பெற்றவுடன் பெற்றவுடன் கணவனை இழந்து விடுவாள். மேற்படி மச்சம் சிவப்பாக இருக்குமாகில், அவளுக்கு வாழ்க்கைக்குரிய சகல வசதிகளும் போகங்களும் இருக்கும். "வலது மார்பில் மீது மச்சம்" இருந்தால் அந்தப் பெண் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருப்பாள். இவளுக்குக் குழந்தைகள் அதிகமாக இருக்கும். "வலது மார்பில் மீது இடது பக்கம் மச்சம்" இருந்தால், வாழ்க்கை வசதிகள் அனைத்தையும் பெற்றிருப்பாள். தெய்வ பக்தியும் பெற்றிருப்பாள். பெரியோர்களிடம் பணிவும் கொண்டிருப்பாள். கணவனுக்கு மிகவும் பிரியமான பத்தினியாகத் திகழ்வாள். "வலது மார்பில் மீது வலது புறத்தில் மச்சம்" இருந்தால், முரட்டு சுபாவமுள்ளவளும், கணவனை மதிக்காதவளும், பிறரை இகழ்பவளும், கர்வமுள்ளவளுமாவால். "இடது மார்பில் மீது வலதுபுறமாக மச்சம்" இருந்தால், இந்தப் பெண்மணி சாதாரண குடும்பத்தவளாக இருந்தாலும் வாழ்க்கைக்குரிய சுக போகங்களை அனுபவிப்பவளாக இருப்பாள். கணவனுக்கு ஏற்ற மனைவியாகவும் எல்லோருடனும் அன்பாக பழகுபவளாகவும் இருப்பாள். இடது மார்பில் மீது இடது புறமாக மச்சம் காணப்பட்டால் அவள் மலடி ஆவார் காம இச்சை அதிகமுள்ளவள். ஏழ்மையால் வருந்துபவள். தகாத காரியங்களைச் செய்பவள். "மார்பில் கீழே மச்சமிருந்தால்", ஏழ்மையை அனுபவிப்பாள். சிலர் பிச்சையெடுத்து உண்பர். சஞ்சலமான மனதும் கோப குணமுமுள்ளவள். பிறரால் வெறுக்கத்தக்கவள். "இருதயத்திற்கு அருகில் மச்சம்" இருந்தால், வாழ்க்கைக்குத் தேவையான சுகபோகங்களை அனுபவிப்பாள். நான்கு பிள்ளைகளைப் பெற்றபின் இரண்டு பெண்களையும் பெற்று சுகமாக வாழ்வான். "இருதயத்திற்கு இடது பக்கத்தில் மச்சம்" இருந்தால், சிறு வயதிலேயே திருமணமாகி சீக்கிரமாகக் குழந்தைகளைப் பெற்று சுகமாக வாழ்வாள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி