"இடது தொடை மீது மச்சம்" ஒன்று அல்லது இரண்டு இருந்தால், அந்தப் பெண்கள் கணவனுக்கும் பெரியோர்களுக்கும் கட்டுப்படாமல் வீட்டையும் மக்களையும் பிரிந்து ஊரூராகத் திரிந்து பர புருஷர்களின் சேர்க்கையால் எல்லோராலும் வெறுக்கத்தக்க வாழ்க்கையை நடத்துவார்கள். "வலது தொடை மீது மச்சம்" இருந்தால் அத்தகைய பெண்கள் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவராகவும், வாழ்க்கைக்குரிய வசதிகள் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். கணவனுக்கேற்ற மனைவியாகவும் குணவதியாகவும் திகழ்வார்கள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.