"நாக்கின் மேல் பகுதியில் மச்சமிருந்தால்" சங்கீதக் கலையில் தேர்ந்தவளாகவும், தனது இனிய கானத்தால் மக்களை மகிழ்விக்கும் கான விதுஷியாகவும் இருப்பாள். தெய்வபக்தியும் குருபக்தியும் நிரம்பப்பப் பெற்றவளாகையால் இம்மையும் மறுமையும் இவளுக்குச் சுகமாக நடக்கும். "நாக்கின் அடிப்புறத்தில் மச்சம்" இருந்தால், தெய்வ பக்தி நிரம்பியவள். ஏழை எளியவர்களுக்கு உதவும் மனப்பாங்குள்ளவள். புண்ய ஷேத்திரே யாத்திரை செய்பவள். எப்பொழுதும் ஒரு விரதத்தை அனுஷ்காடிப்பவள். நற்காரியங்களுக்குத் தாராளமாக செல்வம் வழங்குபவள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.