"பெண்களின் முழங்கையில் மச்சம்" இருந்தால் அவள் மிகவும் தைரியசாலியாக இருப்பாள். "மணிக்கட்டின் நடுவில் மச்சம்" இருந்தால், வாழ்க்கைக்குரிய சகல வசதிகளும் பெற்று சுகமாக வாழ்வாள். கைவேலைகள், பூவேலைகள் முதலியவைகளிலும் சித்திரக் கலையிலும் வல்லவளாக இருப்பாள். "உள்ளங்கையில் மச்சம்" இருந்தால், நல்ல வசதியுடன் வாழ்வாள் சங்கீதக் கலையில் தேர்ச்சி பெற்றுப் புகழ்பெற்ற பாடகியாகத் திகழ்வாள். "உள்ளங்கை நடுவில் மச்சம்" இருந்தால், சிறப்பாகவும், அழகாகவும் வீட்டை அலங்கரிப்பவளாகவும், சித்திரக் கலையில் வல்லவளாகவும் இருப்பாள். குணவதியென்றும், அறிவுமிக்கவளென்றும் பாராட்டப்படுவாள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.