Macham-palangal | | Tamil Best Beauty tips site | Laddu muttai கண்களில் மச்சம் இருந்தால் என்ன பலன் - ஆண்களுக்கு macham-palangal-machapuraanam

கண்களில் மச்சம் இருந்தால் என்ன பலன் - ஆண்களுக்கு

macham-palangal-machapuraanam

பொது : கண்களில் மச்சம் இருப்பது மிக விசேஷமானது அத்தகையவர்கள் மிகவும் பாக்கியசாலிகளாக இருப்பார்கள். "வலது கண்ணில் பாப்பாவுக்கு வலதுபுறமாக மச்சம்" இருந்தால், மிக்க செல்வந்தனாக இருப்பான். பிறவிச் செல்வந்தனான இவனுக்கு எதிர்பாராத வகையில் வாரிசு சொத்தும் அதிகமாகக் கிடைக்கும். மனிதனாகப் பிறவியெடுத்தவன் உலகில் அனுபவிக்கக்கூடிய சகல போகங்களையும் அனுபவிப்பான். பணிவுள்ளவனென்றும், தயாளனென்றும் நண்பர்களாலும் பொது ஜனங்களாலும் பாராட்டுதலைப் பெறுவான். "கண் பாப்பாவுக்கு இடதுபுறமாக மச்சம்" இருந்தால் மேற்கண்ட பலனே சற்று குறைவான அளவில் இருக்கும். "வலது கண் இரப்பை மீது மச்சம்" இருந்தால் அத்தமையவன் தெய்வபக்தி நிரம்பியவன் வாகனங்கள் போன்ற சகல சுகங்களும் பெற்றிருப்பான். எப்பொழுதும் புண்ய காரியங்களைச் செய்து கொண்டும், சுகபோகங்களை அனுபவித்துக்கொண்டும் ஆனந்தமாக வாழ்க்கையை நடத்துவான். "கண் இரப்பை மீது இடதுபுறம் மச்சம்" இருந்தால், வாழ்க்கைக்குரிய வசதிகள் அதிகமாக இல்லாமலிருப்பான். செய்யும் முயற்சிகளில் தோல்வியும் எல்லோராலும் இகழப்படுவான். "இடது கண்ணில் விழிக்கு வலதுபுறம் மச்சம்" இருந்தால், பெண்கள் சகவாசம் இருந்து, பூர்வீக சொத்து சுதந்திரங்களை அழித்து விடுவான்.எப்பொழுதும் மனோவியாதி குடிகொண்டு வாழ்கையே ஒரு பாரமாகி ஏழையாகவே காலம் கழிப்பான். "இடது கண்ணில் விழிக்கு இடதுபுறம் மச்சம்" இருந்தால், நண்பர்கள் சுற்றத்தாருடன் பகைமை கொண்டு, பலவித இன்னல்களுக்கு ஆளாகி, மிக மிக ஏழையாக வருந்துவான். "இடது கடைக் கண்ணில் மச்சம்" இருந்தால் மிகவும் நல்லவனாகவும் பந்துக்களால் விரும்பப்படுகிறவனாகவும், மிகவும் பணிவுள்ளவனாகவும், உண்மையே பேசுபவனாகவும் இருப்பான். இவர்களில் சிலர் நடு வயதிலேயே மரணமடைவார். "கண்களின் இறுதியில் மச்சம்" இருந்தால் நற்குணங்கள் நிரம்பப் பெற்றிருப்பான். தான தர்மங்கள் செய்வதில் விருப்பமுள்ளவன். மிக்க அறிவாளியாகவும், எதையும் துணிந்து செய்யும் தைரியசாலியாகவும் திகழ்வான். மக்களால் பாராட்டப் பெறுவான். ஆனால், எதிர்பாராத வகையில் பிறரால் கொல்லப்படுவான். "கண்களின் இறுதியில் தண்ணீர் வழியுமிடத்தில் மச்சம்" இருந்தால், பிறந்த பிள்ளைகள் மரணமடைவதன் மூலம் புத்ர சோகத்தால் வருந்துவான். "கண் கீழ் இரைப்பைகளின் மேல்பாகத்தில் மச்சம்" இருந்தால் மன அமைதி குறைவாக இருக்கும். மேன் மேலும் கஷ்டங்களும் விரோதங்களும் தோன்றி, மனத்தில் அமைதி இல்லாமையால் இடம் விட்டு ஓடி, க்ஷேத்ராடனம் செய்து ஓரளவு மன அமைதியைத் தேடிக் கொள்வான். "கீழ் இரைப்பைகளின் உட்புறத்தில் மச்சம்" இருந்தால் நன்மை தராது. வறுமையால் வருந்துவான்.பிறர்களால் நிந்திக்கப்படுவான். "இடது கன்னத்தில் மச்சம்" இருந்தால், எந்தத் தொழிலைத் தொடங்கினாலும் இடையூறுகள் உண்டாகும். மற்றவர்களால் அவமதிக்கப் பெற்று மன வேதனையை அனுபவிப்பான். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.




netriyil-macham-palangal
"நெற்றியில் புருவங்கள் இரண்டும் சேரும் இடத்தில் மச்சம்" இருந்தால், அவள் உலகையாளும் அரசனின் பட்டத்தரசியாகத் திகழ்வாள். அது வலது பக்கமாகக் கன்னத்தில் இருந்தால், வாழ்க்கைக்குத் போகங்களும் நிறைந்தவளாக இருப்பாள். "நெற்றியில் உள்ள மச்சம்" சிவப்பு நிறமாக இருந்தால், அவள் மிகவும் கோபக்காரியாக இருப்பாள். "மாநிறமாக இருந்தால்" மிகவும் கொடியளவாக இருப்பாள். கொலை, களவு, விபச்சாரம் முதலிய சகல துர்குணங்கள் அவரிடம் இருக்கும். "நெற்றியில் இடது பக்கமாக மச்சம்" இருந்தால், மிகவும் ஏழையாக உண்ண உடுக்க வகையின்றி தவிப்பாள். "நெற்றியில் இடதுபுறம்" பொறிக்கு மேலே மச்சம் சிவப்பாக இருந்தால், நல்லவள். கருப்பாக இருந் தால் துஷ்ட சுபாவமுள்ளவன். "நெற்றியில் வலது பொறிக்கு மேலே மச்சம்" இருந்தால், மிகவும் பாக்யமும் புகழும் கொண்டவளாகத் திகழ்வாள். கணவனுக்கேற்ற மனைவியெனவும் பாராட்டப்பெறுவாள். வாழ்க்கைக்குத் தேவையான சகல சுகங்களையும் அனுபவிப்பாள். "நெற்றியின் நடுவில் மச்சம்" இருந்தால், அவள் பட்டத்து ராணியாக, பெரிய செல்வந்தரின் மனைவியாகவோ இருப்பாள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 05-06-2020
nakkil-macham-palangal
"நாக்கின் மேல் பகுதியில் மச்சமிருந்தால்" சங்கீதக் கலையில் தேர்ந்தவளாகவும், தனது இனிய கானத்தால் மக்களை மகிழ்விக்கும் கான விதுஷியாகவும் இருப்பாள். தெய்வபக்தியும் குருபக்தியும் நிரம்பப்பப் பெற்றவளாகையால் இம்மையும் மறுமையும் இவளுக்குச் சுகமாக நடக்கும். "நாக்கின் அடிப்புறத்தில் மச்சம்" இருந்தால், தெய்வ பக்தி நிரம்பியவள். ஏழை எளியவர்களுக்கு உதவும் மனப்பாங்குள்ளவள். புண்ய ஷேத்திரே யாத்திரை செய்பவள். எப்பொழுதும் ஒரு விரதத்தை அனுஷ்காடிப்பவள். நற்காரியங்களுக்குத் தாராளமாக செல்வம் வழங்குபவள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 05-06-2020
tholpatayil-macham-palangal
"இடது தோளின் மீது மச்சமுள்ள" பெண், வாழ்க்கைக்குத் தேவையான வீடுவாசல், நிலபுலன் முதலான வசதிகளையும் பெற்றிருப்பாள் ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகள் அதிகமாக இருக்கும். அனுகூலமான கணவனைப் பெற்று இன்பமயமான வாழ்க்கை நடத்துவாள். "வலது தோள்மீது மச்சம்" இருந்தால் அவள் நடத்தை கெட்டவளாக இருப்பாள். இவளுக்கு வாய்க்கும் கணவன் உடல் மெலிந்தவனாக இருக்கக்கூடும். இவள் மயக்கம் தரும் மதுவர்க்கங்களைப் பயன்படுத்துவாள். பெண்மையை காட்டிலும் ஆண்மை சுபாவம் அதிகமாக உள்ளவள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 05-06-2020
thoppulil-macham-palangal
"தொப்புள் மீது மச்சம்" இருந்தால், அந்தப் பெண் வாழ்க்கைக்குரிய சகல சுகங்களையும் அனுபவிப்பாள். அதுவே தொப்புள் அடியில் இருந்தால் அந்தப் பெண் எந்த வசதியுமற்று ஏழையாகக் காலம் கழிப்பாள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 05-06-2020
thodayil-macham-palangal
"இடது தொடை மீது மச்சம்" ஒன்று அல்லது இரண்டு இருந்தால், அந்தப் பெண்கள் கணவனுக்கும் பெரியோர்களுக்கும் கட்டுப்படாமல் வீட்டையும் மக்களையும் பிரிந்து ஊரூராகத் திரிந்து பர புருஷர்களின் சேர்க்கையால் எல்லோராலும் வெறுக்கத்தக்க வாழ்க்கையை நடத்துவார்கள். "வலது தொடை மீது மச்சம்" இருந்தால் அத்தகைய பெண்கள் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவராகவும், வாழ்க்கைக்குரிய வசதிகள் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். கணவனுக்கேற்ற மனைவியாகவும் குணவதியாகவும் திகழ்வார்கள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 05-06-2020
thaaadayil-macham-palangal
"இடது தாடை மீது மச்சம்" இருந்தால், மிக்க அழகியும், அழகுக்கேற்ற குணமும் கொண்டிருப்பாள். வாழ்க்கைக்குரிய சகல வசதிகளும் பெற்று இன்பமாக வாழ்நாளைக் கழிப்பாள். வலது தாடை மீது மச்சம் இருந்தால், மேற் சொன்னதற்கு மாறாக நடக்கும். எப்பொழுதும் ஏழ்மையாலும், நோயாலும் வருத்தப்பட்டு, வாழ்க்கை துக்கமயமாக அமையும். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 05-06-2020
thalayil-macham-palangal
"தலையில் மாநிறமான மச்சம்", அல்லது சிவப்பு நிறமான மச்சம் இருந்தால் அத்தகைய பெண் துர்க்குணவதியாவாள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.
Laddu Muttai | 05-06-2020