"நெற்றியில் புருவங்கள் இரண்டும் சேரும் இடத்தில் மச்சம்" இருந்தால், அவள் உலகையாளும் அரசனின் பட்டத்தரசியாகத் திகழ்வாள். அது வலது பக்கமாகக் கன்னத்தில் இருந்தால், வாழ்க்கைக்குத் போகங்களும் நிறைந்தவளாக இருப்பாள். "நெற்றியில் உள்ள மச்சம்" சிவப்பு நிறமாக இருந்தால், அவள் மிகவும் கோபக்காரியாக இருப்பாள். "மாநிறமாக இருந்தால்" மிகவும் கொடியளவாக இருப்பாள். கொலை, களவு, விபச்சாரம் முதலிய சகல துர்குணங்கள் அவரிடம் இருக்கும். "நெற்றியில் இடது பக்கமாக மச்சம்" இருந்தால், மிகவும் ஏழையாக உண்ண உடுக்க வகையின்றி தவிப்பாள். "நெற்றியில் இடதுபுறம்" பொறிக்கு மேலே மச்சம் சிவப்பாக இருந்தால், நல்லவள். கருப்பாக இருந் தால் துஷ்ட சுபாவமுள்ளவன். "நெற்றியில் வலது பொறிக்கு மேலே மச்சம்" இருந்தால், மிகவும் பாக்யமும் புகழும் கொண்டவளாகத் திகழ்வாள். கணவனுக்கேற்ற மனைவியெனவும் பாராட்டப்பெறுவாள். வாழ்க்கைக்குத் தேவையான சகல சுகங்களையும் அனுபவிப்பாள். "நெற்றியின் நடுவில் மச்சம்" இருந்தால், அவள் பட்டத்து ராணியாக, பெரிய செல்வந்தரின் மனைவியாகவோ இருப்பாள். குறிப்பு: ஆண்களுக்கும் பெண்களுக்கும் மச்சம் பலன்கள் என்பது வேறுபடும், நமது வலைத்தளத்தில் இருபாலருக்கும் மச்ச பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, படித்து பயன் பெறவும் நன்றி.