24 திரைப்படம் தாராளமா 50 நாட்களை கடந்து ஓடுச்சு. படத்தோட பட்ஜெட் 70 கோடி, கலக்க்ஷன் பண்ணுனது
106 கோடி வியாபார ரீதியா பெரும் வெற்றி படமா இருந்தாலும் ரசிகர்களிடையே சுமார் மதிப்பீடு தான் கெடச்சது,
சரியா சொல்லணும்-னா 24 படம் தளபதி விஜய் அவர்களுக்கு எழுதப்பட்ட கதை , 2008 ல இந்த கதைய இயக்குனர் திரு விக்ரம் குமார் விஜய சந்திச்சு சொல்லிருக்காரு. அந்த காலகட்டத்துல விஜய் கமர்சியல் படங்கள் ல கவனம் செலுத்துனதால இந்த கதைய நிராகரிச்சுட்டாரு. இந்த படத்த நிராகரிச்சுட்டு விஜய் அவர்கள் நடிச்ச படம் தான் வில்லு.
தளபதி விஜய் நிராகரிச்சதுக்கு அப்புறம் இயக்குனர் திரு விக்ரம் குமார் அவர்கள் சீயான் விக்ரம் கிட்ட 2009 ல இந்த கதைய சொன்னாரு, விக்ரம் கு இந்த கதை ரொம்பவே பிடிச்சு போச்சு , திரைக்கதை ல கொஞ்சம் மாற்றம் செய்ய சொன்னாரு ஏன்னா விஜய் கு தகுந்த மாதிரி காட்சிகள் அமைப்பு இருந்தது.
திரைக்கதை ல சில மாற்றங்கள் பன்னிட்டு ஷூட்டிங் ல எறங்குனாரு , நடிகை இலியானா, இசை ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பு ஸ்ரீ ராஜ கலையம்மன் மீடியாஸ் (ஆல்வார் ,வேல், கண்ணுக்குள் நிலவு ) இது தான் விக்ரம் நடிப்புல தயாரான 24 படம் .
டிசம்பர் 2009 ல இந்த படம் தொடங்கப்பட்டுச்சு , விக்ரம் அவர்கள் திரும்ப திரும்ப திரைக்கதைல மாற்றம் செய்ய சொல்லிகிட்டே இருந்தாரு. தயாரிப்பு நிறுவனமும் கம்மி பட்ஜெட் ல படத்தை முடிக்க சொன்னாங்க.
இப்டி மூணு பக்கமும் சரியான பிணைப்பு இல்லாததால இயக்குனர் இந்த படத்த கைவிட முடிவெடுத்தார்.
ஆகஸ்ட் 2014 ல இயக்குனர் நம்ம சூர்யா அண்ணாகிட்ட இந்த கதையை சொன்னாரு அவரும் ,ஓகே சொல்லிட்டாரு. ஆனா எந்த தயாரிப்பு நிறுவனமும் 24 படத்த தயாரிக்க முன்வரல. அதனால சூர்யா அவர்கள் தன்னோட சொந்த தயாரிப்புல இந்த படத்தை எடுக்க ஆரமிச்சாரு. மொதல்ல கேத்ரின் தெரசா கிட்ட நடிக்க கேட்டாங்க அவங்க தெலுங்கு படங்கள்ல நடிச்சுட்டு இருந்ததால கடைசில சமந்தா வ நடிக்க வச்சாங்க.
ஆத்ரேயா கேரக்டர் கு 6 விதமான வடிவமைப்பு செஞ்சு கடைசில ஓகே செஞ்சது தான் நம்ம படத்துல பாத்த ஆத்ரேயாடா. சூர்யா சொன்ன மாதிரியே 100 நாள் ல இந்த படத்தோட ஷூட்டிங்க இயக்குனர் முடிச்சு குடுத்தாரு. இந்த படத்தோட இரண்டாம் பாகத்துக்கு #24Decoded னு டைட்டில் வைக்கப்பட்டது. ஆனா 24 திரைப்படம் சுமாரான வரவேற்ப்பை பெற்றதால அந்த படத்த எடுக்காம நிறுத்திட்டாங்க.
இன்னைக்கு நம்ம தலையோட பிறந்தநாள் கொண்டாட்டம் செம்மையா போய்ட்டு இருக்கு இந்த நல்ல நாள்ல நம்ம தல செஞ்ச சாதனைலாம் எல்லா ரசிகர்களோடு பகிர்ந்துக்க நெனச்சி இந்த பதிவ போடுறேன். இதெல்லாம் எங்களுக்கு தெரியாதா-னு கேக்காதீங்க இந்த சந்தோஷமான நாள்-ல இத படிக்கறப்போ "உதட்டோரம் சிறு புன்னகை".
மங்காத்தா படம் ஓடாத ஓட்டமில்ல, எதிரிகளையும் பல தடவ தியேட்டர் ல பாக்க வச்ச படம் , இப்போ அந்த படம் அல்லி குவித்த விருதுகளோட பட்டியல பாப்போம்.
விஜய் அவார்ட்ஸ்:
தல - சிறந்த வில்லன் , பிடித்த ஹீரோ (FavoriteHero)
வெங்கட் பிரபு - பிடித்த இயக்குனர் (FavoriteDirector)
மிர்ச்சி அவார்ட்ஸ்:
நிரஞ்சன் பாரதி- சிறந்த வளர்ந்துவரும் பாடலாசிரியர், நீ நான் பாட்டுக்காக
குமரகுருபரன் - சிறந்த தொழில்நுட்ப ஒலி பொறியாளர்(Sound Engineer), விளையாடு மங்காத்தா பாடலுக்காக
எடிசன் அவார்ட்ஸ்:
மஹத் - சிறந்த அறிமுக நடிகர்
பிரேம்ஜி - சிறந்த நகைசுவை நடிகர்
சினிமா டைம்ஸ் அவார்ட்ஸ்:
தல - சிறந்த நடிகர்
தயாநிதி அழகிரி - சிறந்த தயாரிப்பாளர்
அஸ்வின் - சிறந்த அறிமுக நடிகர்
ராய் லக்ஷ்மி - சிறந்த எதிர்மறை நடிகை (Negative Role)
இன்டர்நேஷனல் தமிழ் பில்ம் அவார்ட்ஸ்:
தயாநிதி அழகிரி - சிறந்த தயாரிப்பாளர்
வெங்கட் பிரபு - பிடித்த இயக்குனர் (FavoriteDirector)
பிரேம்ஜி - சிறந்த துணை நடிகர்
சக்திசரவணன்- சிறந்த ஒளிப்பதிவாளர்
சுசித்ரா - சிறந்த பின்னணி பாடகி , வாடா பின்லேடா பாடலுக்காக
ஒரு படத்த எடுக்க சினிமா துறை-ல இருக்கவங்கள்லாம் எவ்ளோ பாடுபடுறாங்கன்னு நமக்கெல்லாம் நல்லாவே தெரியும். ஆனா அதையெல்லாம் தாண்டி மனசுக்கு பிடிச்ச மாதிரி தனக்கு தெரிஞ்ச கலை-ய மக்களுக்கு நல்ல விதமா கொண்டு போய் சேர்க்கணும்-னு ஒவ்வொரு படைப்பாளியும் படுற கஷ்டமும் அதுக்காக போடுற உழைப்பும் நிறைய பேருக்கு தெரியாமயே போயிடுது.
அது செரிடா இப்போ எதுக்கு இப்டி வள வள னு பேசிட்டு இருக்கன்னு கேக்கறீங்களா ,அப்படிப்பட்ட ஒரு இயக்குனர் உழைப்ப பத்தி தான் நாம இப்போ படிக்க போறோம். நம்ம தளபதி நடிச்ச நினைத்தேன் வந்தாய் திரைப்படத்துல வண்ணநிலவே பாட்டு பிடிக்காதவங்க-னு யாருமே இருக்க முடியாது .
பார்க்க அந்த பாட்டுல அப்டி என்ன சுவாரசியமா இருக்குனு பல பேர் நினைக்கலாம் , தளபதி தினம் ஷூட்டிங்-கு கலர் கலரா பனியன் போட்டுக்கிட்டு டெய்லி வருவாராம். இயக்குனர் கே செல்வபாரதி தளபதி இப்டி வரத பாத்துட்டு அத வச்சு ஒரு பாடல எடுத்துடலாம்னு தினம் காலைல தளபதி வந்ததும் ஒரு 10 நிமிஷம் வண்ணநிலவே பாட்டு பாடிகிட்டே ஷூட்டிங் லொகேஷன ஒரு ரவுண்டு வர சொல்லுவாராம்.
அதையெல்லாம் ஒரு தொகுப்பா மாத்தி தான் அந்த பாடலை நமக்கு குடுத்துருப்பாங்க. இந்த செய்தியை படிச்சுட்டு உடனே அந்த பாட்ட ஒரு தடவ பாருங்க. அதுல எவ்ளோ உழைப்பு இருக்கு எவ்ளோ அழகா காட்சி படுத்திருக்காங்க-னு நமக்கே தெரியும் . யான் பெற்ற இன்பம் பெறுக இந்த வையகம்.