24 திரைப்படம் தாராளமா 50 நாட்களை கடந்து ஓடுச்சு. படத்தோட பட்ஜெட் 70 கோடி, கலக்க்ஷன் பண்ணுனது 106 கோடி வியாபார ரீதியா பெரும் வெற்றி படமா இருந்தாலும் ரசிகர்களிடையே சுமார் மதிப்பீடு தான் கெடச்சது, சரியா சொல்லணும்-னா 24 படம் தளபதி விஜய் அவர்களுக்கு எழுதப்பட்ட கதை , 2008 ல இந்த கதைய இயக்குனர் திரு விக்ரம் குமார் விஜய சந்திச்சு சொல்லிருக்காரு. அந்த காலகட்டத்துல விஜய் கமர்சியல் படங்கள் ல கவனம் செலுத்துனதால இந்த கதைய நிராகரிச்சுட்டாரு. இந்த படத்த நிராகரிச்சுட்டு விஜய் அவர்கள் நடிச்ச படம் தான் வில்லு. தளபதி விஜய் நிராகரிச்சதுக்கு அப்புறம் இயக்குனர் திரு விக்ரம் குமார் அவர்கள் சீயான் விக்ரம் கிட்ட 2009 ல இந்த கதைய சொன்னாரு, விக்ரம் கு இந்த கதை ரொம்பவே பிடிச்சு போச்சு , திரைக்கதை ல கொஞ்சம் மாற்றம் செய்ய சொன்னாரு ஏன்னா விஜய் கு தகுந்த மாதிரி காட்சிகள் அமைப்பு இருந்தது. திரைக்கதை ல சில மாற்றங்கள் பன்னிட்டு ஷூட்டிங் ல எறங்குனாரு , நடிகை இலியானா, இசை ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பு ஸ்ரீ ராஜ கலையம்மன் மீடியாஸ் (ஆல்வார் ,வேல், கண்ணுக்குள் நிலவு ) இது தான் விக்ரம் நடிப்புல தயாரான 24 படம் . டிசம்பர் 2009 ல இந்த படம் தொடங்கப்பட்டுச்சு , விக்ரம் அவர்கள் திரும்ப திரும்ப திரைக்கதைல மாற்றம் செய்ய சொல்லிகிட்டே இருந்தாரு. தயாரிப்பு நிறுவனமும் கம்மி பட்ஜெட் ல படத்தை முடிக்க சொன்னாங்க. இப்டி மூணு பக்கமும் சரியான பிணைப்பு இல்லாததால இயக்குனர் இந்த படத்த கைவிட முடிவெடுத்தார். ஆகஸ்ட் 2014 ல இயக்குனர் நம்ம சூர்யா அண்ணாகிட்ட இந்த கதையை சொன்னாரு அவரும் ,ஓகே சொல்லிட்டாரு. ஆனா எந்த தயாரிப்பு நிறுவனமும் 24 படத்த தயாரிக்க முன்வரல. அதனால சூர்யா அவர்கள் தன்னோட சொந்த தயாரிப்புல இந்த படத்தை எடுக்க ஆரமிச்சாரு. மொதல்ல கேத்ரின் தெரசா கிட்ட நடிக்க கேட்டாங்க அவங்க தெலுங்கு படங்கள்ல நடிச்சுட்டு இருந்ததால கடைசில சமந்தா வ நடிக்க வச்சாங்க. ஆத்ரேயா கேரக்டர் கு 6 விதமான வடிவமைப்பு செஞ்சு கடைசில ஓகே செஞ்சது தான் நம்ம படத்துல பாத்த ஆத்ரேயாடா. சூர்யா சொன்ன மாதிரியே 100 நாள் ல இந்த படத்தோட ஷூட்டிங்க இயக்குனர் முடிச்சு குடுத்தாரு. இந்த படத்தோட இரண்டாம் பாகத்துக்கு #24Decoded னு டைட்டில் வைக்கப்பட்டது. ஆனா 24 திரைப்படம் சுமாரான வரவேற்ப்பை பெற்றதால அந்த படத்த எடுக்காம நிறுத்திட்டாங்க.