ஒரு படத்த எடுக்க சினிமா துறை-ல இருக்கவங்கள்லாம் எவ்ளோ பாடுபடுறாங்கன்னு நமக்கெல்லாம் நல்லாவே தெரியும். ஆனா அதையெல்லாம் தாண்டி மனசுக்கு பிடிச்ச மாதிரி தனக்கு தெரிஞ்ச கலை-ய மக்களுக்கு நல்ல விதமா கொண்டு போய் சேர்க்கணும்-னு ஒவ்வொரு படைப்பாளியும் படுற கஷ்டமும் அதுக்காக போடுற உழைப்பும் நிறைய பேருக்கு தெரியாமயே போயிடுது. அது செரிடா இப்போ எதுக்கு இப்டி வள வள னு பேசிட்டு இருக்கன்னு கேக்கறீங்களா ,அப்படிப்பட்ட ஒரு இயக்குனர் உழைப்ப பத்தி தான் நாம இப்போ படிக்க போறோம். நம்ம தளபதி நடிச்ச நினைத்தேன் வந்தாய் திரைப்படத்துல வண்ணநிலவே பாட்டு பிடிக்காதவங்க-னு யாருமே இருக்க முடியாது . பார்க்க அந்த பாட்டுல அப்டி என்ன சுவாரசியமா இருக்குனு பல பேர் நினைக்கலாம் , தளபதி தினம் ஷூட்டிங்-கு கலர் கலரா பனியன் போட்டுக்கிட்டு டெய்லி வருவாராம். இயக்குனர் கே செல்வபாரதி தளபதி இப்டி வரத பாத்துட்டு அத வச்சு ஒரு பாடல எடுத்துடலாம்னு தினம் காலைல தளபதி வந்ததும் ஒரு 10 நிமிஷம் வண்ணநிலவே பாட்டு பாடிகிட்டே ஷூட்டிங் லொகேஷன ஒரு ரவுண்டு வர சொல்லுவாராம். அதையெல்லாம் ஒரு தொகுப்பா மாத்தி தான் அந்த பாடலை நமக்கு குடுத்துருப்பாங்க. இந்த செய்தியை படிச்சுட்டு உடனே அந்த பாட்ட ஒரு தடவ பாருங்க. அதுல எவ்ளோ உழைப்பு இருக்கு எவ்ளோ அழகா காட்சி படுத்திருக்காங்க-னு நமக்கே தெரியும் . யான் பெற்ற இன்பம் பெறுக இந்த வையகம்.