இன்னைக்கு நம்ம தலையோட பிறந்தநாள் கொண்டாட்டம் செம்மையா போய்ட்டு இருக்கு இந்த நல்ல நாள்ல நம்ம தல செஞ்ச சாதனைலாம் எல்லா ரசிகர்களோடு பகிர்ந்துக்க நெனச்சி இந்த பதிவ போடுறேன். இதெல்லாம் எங்களுக்கு தெரியாதா-னு கேக்காதீங்க இந்த சந்தோஷமான நாள்-ல இத படிக்கறப்போ "உதட்டோரம் சிறு புன்னகை".
மங்காத்தா படம் ஓடாத ஓட்டமில்ல, எதிரிகளையும் பல தடவ தியேட்டர் ல பாக்க வச்ச படம் , இப்போ அந்த படம் அல்லி குவித்த விருதுகளோட பட்டியல பாப்போம்.
விஜய் அவார்ட்ஸ்:
தல - சிறந்த வில்லன் , பிடித்த ஹீரோ (FavoriteHero)
வெங்கட் பிரபு - பிடித்த இயக்குனர் (FavoriteDirector)
மிர்ச்சி அவார்ட்ஸ்:
நிரஞ்சன் பாரதி- சிறந்த வளர்ந்துவரும் பாடலாசிரியர், நீ நான் பாட்டுக்காக
குமரகுருபரன் - சிறந்த தொழில்நுட்ப ஒலி பொறியாளர்(Sound Engineer), விளையாடு மங்காத்தா பாடலுக்காக
எடிசன் அவார்ட்ஸ்:
மஹத் - சிறந்த அறிமுக நடிகர்
பிரேம்ஜி - சிறந்த நகைசுவை நடிகர்
சினிமா டைம்ஸ் அவார்ட்ஸ்:
தல - சிறந்த நடிகர்
தயாநிதி அழகிரி - சிறந்த தயாரிப்பாளர்
அஸ்வின் - சிறந்த அறிமுக நடிகர்
ராய் லக்ஷ்மி - சிறந்த எதிர்மறை நடிகை (Negative Role)
இன்டர்நேஷனல் தமிழ் பில்ம் அவார்ட்ஸ்:
தயாநிதி அழகிரி - சிறந்த தயாரிப்பாளர்
வெங்கட் பிரபு - பிடித்த இயக்குனர் (FavoriteDirector)
பிரேம்ஜி - சிறந்த துணை நடிகர்
சக்திசரவணன்- சிறந்த ஒளிப்பதிவாளர்
சுசித்ரா - சிறந்த பின்னணி பாடகி , வாடா பின்லேடா பாடலுக்காக