1. பீட்ரூட்:
பீட்ரூட்டில் உள்ள செல்லுலோஸ் ஆனது இலகுவாய் மலம் கழிக்க உதவும். நாள்பட்ட மலச்சிக்கலை தீர்த்துவைக்கும் சுபாவம் பீட்ரூட்டிற்க்கு உண்டு. ஆசன வாய் அருகே வீக்கம் ஏற்படுவதை தடுக்கும் இரவு படுக்கைக்கு செல்லும் முன் அரை முதல் ஒரு டம்பளர் வரை பீட்ரூட் கசாயம் பருகினால் நல்லது.
2. பாகற்காய்:
பாகற்காய் இலையானது மூலநோய் பிரச்சனைக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மூன்று தேக்கரண்டி பாகற்காய் இலை சாறுடன் ஒரு கிளாஸ் மோர் கலந்து குடித்துவர மூலநோய் தீரும். ஒரு மாதம் முழுக்க தினமும் ஒரு டம்பளர் பருகிவர சிறந்தது.
3. வெங்காயம்:
30 கிராம் வெங்காயத்தை தண்ணீரில் உரசி 60 கிராம் அளவிற்கு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர மூல வியாதி குணமாகும் தினமும் இரண்டு முறையாவது சில நாட்கள் வரை சாப்பிடவேண்டும்.
4. முள்ளங்கி:
காலை மற்றும் மாலை வேளைகளில் 60 முதல் 90 மில்லி வரை முள்ளங்கி சாறு சாப்பிட்டுவர மூலம் கட்டுக்குள் வரும்.