பித்தம் | | Tamil Best Beauty tips site | Laddu muttai பித்தம் சரியாக சித்த மற்றும் பாட்டி வைத்தியம்

பித்தம் சரியாக சித்த மற்றும் பாட்டி வைத்தியம்

1.கருவேப்பிலை துவையல் அல்லது கருவேப்பிலை பொடி தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர பைத்தியம் மாறும். பித்தம் தணியும். 2.காய்ந்த வேப்பம் பூவை சட்டியில் ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு சிவக்க பொரிந்து சிறிது உப்பு போட்டு பிசைந்து 1 கரண்டி சாதத்தில் கலந்து சாப்பிட்டால் பித்தம் நீங்கும். 3.அரச மரத்தின் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும். 4.செங்கழுநீர் கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி வெயிலில் காயவைத்து இடித்து, சலித்து வைத்துக்கொண்டு சிறிது சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர உடல் சூடு, பித்தம் தணியும். 5.குறைய நல்ல பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்த சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டால் தாகம் பித்தம் குறையும். 6.தினசரி வாழைப்பழம் சாப்பிட்டு வர பித்தம் தணியும். 7.சிறுவெங்காயத்தைச் சிறிது வெல்லத்துடன் சேர்த்து நெய்விட்டு வதக்கிச் சாப்பிட பித்தம் குறையும். 8. அகத்தி கீரை சாப்பிடுவது பித்த கோளாறுகளை அகற்றும். உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். 9. செலவின்றி நிரந்தர தீர்வுக்காக தினமும் காலையில் வெறும் வயிற்றுடன், பல் துலக்கியவுடன் உடன் வாய் சுத்தம் செய்யும் போது விரல்களால் நாக்கின் அழுத்தித் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும்போது உணவுக்குழாய் வழியே உள்ளே இருக்கும் பித்தநீர் முதலில் வெளியேறும். இந்த பித்த நீர் வெளியேற்றம் பல நோய்கள் உருவாவதைத் தவிர்க்கும். மேலும் சளியும் சிறிது சிறிதாக வெளியேறும். 10. சுக்கை தூள் பண்ணி எலுமிச்சம் பழச்சாறு கூட கலந்து குடித்து வரவும். 11. 100 கிராம் உலர்ந்த திராட்சை, 200 கிராம் கடுக்காயுடன் சேர்த்து அரைத்து தினசரி காலையில் 3 கிராம் அளவு சாப்பிட்டு வர, பித்தம், வாந்தி, வாய் கசப்பு தீரும். 12. சுக்கு, மிளகு, திப்பிலி, விளாமிச்சை வேர், கிராம்பு ஆகியவைகளை வகைக்கு 10 கிராம் வீதம் எடுத்து தூள் செய்து இந்த தூளை தினம் 2 வேளை 5 கிராம் வீதம் மூன்று அல்லது ஐந்து தினம் சாப்பிட்டு வர தலைச் சுற்றல் & பித்தம் குணமாகும். 13. திப்பிலி 5 கிராம், மிளகு 10 கிராம் எடுத்து தூளாக்கி அந்த தூள் விளாம்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பித்தம் மற்றும் தலை சுற்றல் குணமாகும்.




1. அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட ஆண்மை பெருகும். 2. பேரீச்சம்பழத்தை ஆட்டுப்பாலில் ஊறவைத்து மறுநாள் காலையில் ஏலக்காய் சேர்த்து சாப்பிட ஆண்மை பெருகும். 3. நிலபூசணி கிழங்கை சாறு பிழிந்து பசும்பாலில் விட்டு சர்க்கரை சேர்த்து காலை, மாலை 3 மாதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும். ஆண்மை பெருகும். 4. கருஞ்சீரக எண்ணெய் ஆண்குறியில் தடவி வந்தால் ஆண்குறி பெருக்கும். 5. தவசி கீரை, முருங்கை கீரை, சாப்பிட்டு வர ஆண்மை அதிகரிக்கும். 6. இரவு படுக்கைக்குச் செல்லம் முன் தினசரி ஒரு மாதுளம் பழம் சாப்பிட்டு வர குறை நீங்கும். 7. ஆண்கள் விந்து எண்ணிக்கை குறைவாக இருப்பவர்கள் அரச விதையை பாலில் கலந்து குடித்து வர விந்து எண்ணிக்கை அதிகரிக்கும். 8. அரச மரத்தின் பழம், வேர், பட்டை, இலைகளை தூள் செய்து இந்த தூளை சுடுபாலில் போட்டு குடித்துவர ஆண்மை பலம் உண்டாகும். 9. அமுக்கிரா கிழங்கு பொடியுடன் தேனும் சேர்த்து சாப்பிட்டு வர ஆண்மை குறைவு நீங்கும். 10. வீரியம் பெற மகிழம் பூவை நீர்விட்டு காய்ச்சி அந்த நீரை ஒரு டம்ளர் பாலுடன் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும். 11. கருஞ்சீரக எண்ணெய் வெற்றிலையில் பூசி உண்டு வர ஆண்மை பெருகும். 12. ஓரிதழ் தாமரை பொடி செய்து சம அளவு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர சுக்கில விருத்தியாகும். ஆண்மை பெருகும். 13. ஆலம்பழத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலில் சாப்பிட்டு வர ஆண்மை வலு பெறும். 14. திப்பிலி பொடியை நெய்யுடன் கலந்து சாப்பிட ஆண்மை பெருகும். 15. காமபெருக்கி அத்திப்பழம், அத்தி பிஞ்சு, அத்திபழம் சாப்பிட காம பெருக்கியாக செயல்படும். 16. சர்க்கரை கலந்த பசும்பாலில் உளுத்தம்பருப்பை ஊற வைத்து பின் காய வைத்து மாவாக்கி கூட சிறிது வெண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு கேக் செய்து சாப்பிட ஆண்மை குறைவு நீங்கும். 17. ஆண்க ளுக்கு மகிழம்பூவை பறித்து சுத்தம் செய்து நீர் விட்டுக்காய்ச்சி அந்த நீரை ஒரு டம்ளர் பாலுடன் சேர்த்துச்சாப்பிட ஆண்மை விரிய உணர்வு உண்டாகும்.
Laddu Muttai | 19-04-2020

Tag : முடி |

1. கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும் முடி வளரும். 2. முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வரவும். தலைமுடி அடர்த்தியாகவும் கருப்பாகவும் ஆகும். 3. கேரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தேய்த்து வர முடி நன்றாக வளரும். 4. மருதாணி பூவை தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து வெயிலில் காயவைத்து தொடர்ந்து தேய்த்து வர வழுக்கை தலையில் முடி வளரும். 5. வழுக்கையில் முடி வளர வெங்காயம், செம்பருத்தி பூவுடன் சேர்த்து அரைத்து வழுக்கை மீது தடவிவர நல்ல பலன் கிடைக்கும். 6. நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவி வர முடிவளரும். 7. சடாமஞ்சளை நல்லெண்ணையில் காய்ச்சி வாரம் 1 முறை தலைக்கு தேய்த்து குளித்து வர முடி அடர்த்தியாகவும், நீண்டும் வளரும்.
Laddu Muttai | 19-04-2020

Tag : முடி |

1. ஆலமரத்தின் இளம்பிஞ்சு, வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாக வளரும். 2. கருப்பு முடியாக மாற காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணையுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி, தேய்த்து வர முடி கருமையாகும். முடி உதிர்வதை தடுக்கும். | 3. நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை றத்திற்கு மாறும். நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லி வற்றல் சாப்பிடலாம். 4. தாமரை பூவை தண்ணீரில் கஷாயம் செய்து வடிகட்டி காலை, மாலை சாப்பிட்டு வர இளநரை மறையும்.
Laddu Muttai | 19-04-2020

Tag : முடி |

1. வெந்தயம் குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து 1 வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். 2. நெல்லிக்காய் சாற்றுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்குத் தேய்த்து வர முடி உதிர்வது நின்று விடும். கண்கள் குளிர்ச்சியடையும். 3. வேப்பிலை - 1 கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து மறுநாள் வேகவைத்த நீரை கொண்டு தலை முழுகி வந்தால் முடி கொட்டுவது நின்றுவிடும். பேன் நீங்கும்.
Laddu Muttai | 19-04-2020
1. நீலி என்னும் மூலிகையை அரைத்து சுண்டைக்காய் அளவு உள்ளுக்குச் சாப்பிட மாலைக்கண் நோய் குணமாகும். மருந்துண்ணும் நாளில் உப்பு புளியைச் சேர்த்தல் கூடாது. 2. மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, கீழாநெல்லி பொடி சம.அளவு கலந்து சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும். 3. வேப்பங்கொழுந்து, ஓமம், உப்பு சேர்த்து அரைத்து தொடர்ந்து சாப்பிட்டு வா கண்ணிலிருக்கும் படலம் மறைப்பு அகலும், காமாலை, மாலை கண் புழுவெட்டு நோய்கள் அகலும். 4. மாலைக்கண் நோயின் அறிகுறி தென்படும் போதே பப்பாளப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் வராது.
Laddu Muttai | 19-04-2020
1. விளாம்பழ மரத்தின் கொழுந்து இலைகளை பறித்து கஷாயம் வைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றிலுள்ள வாய்வு நீங்குவதுடன் நல்ல பசி எடுக்கும். 2. நாவல் பழம்-குளிர்ச்சியை தரக்கூடியது வாய்வு தொல்லை வயிற்று புண்களை ஆற்றும் தன்மை உடையது. நாவல் பழம் சாப்பிட காலத்தில் வயிற்று புண் குணமாகும். 3. வாத நாராயணன் இலையை காயவைத்து இடித்து தூளாக வைத்துக்கொண்டு 5 கிராம் தூளை சுடுதண்ணீரில் வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வர வாய்வுத் தொல்லை குணமாகும். 4. வாய்வுத்தொல்லை உள்ளவர்கள் உருளைக்கிழங்கு சாப்பிடக்கூடாது. 5. வெள்ளைப்பூண்டு பசும்பாலில் வேகவைத்து அப் பூண்டை சாப்பிட்டு பால் குடித்தால் வாயு தொல்லை குறையும். 6. வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயு தொல்லை நீங்கும். 7. குப்பைமேனி இலையை காயவைத்து பொடிசெய்து காலை, மாலை 12 காண்டி மோரில் கலந்து சாப்பிட அஜீரணம், வாயு குணமாகும். 8. வாதமொடக்கி மரத்தின் கொழுந்துகளை சுத்தம் செய்து சாப்பிட்டு வந்தால் வாயுபிடிப்பு அகலும். 9. வாழைக்காயை இஞ்சியுடன் பூண்டு சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டு வர வாயுத் தொல்லை குணமாகும்.
Laddu Muttai | 19-04-2020
1. அத்திபழம் தேனில் ஊறவைத்து சாப்பிட மாதவிடாய் வயிற்று வலி குறையும். 2. 30 கிராம் பெருங்காயம் 6 கிராம் பனை வெல்லம் சேர்த்து மாதவிடாய் காலத்திலிருந்து 5 நாட்கள் வரை சாப்பிட்டு வந்தால் வலியுடன் வரும் விலக்கு குணமாகும். 3. வெள்ளெருக்கு சீரகம், மிளகு சேர்த்து அரைத்து குடிக்க பெண்கள் மாதவிடாய் வலி குணமாகும். 4. புதினா இலையின் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடிக்க மாதவிடாய் ஒழுங்காகும். 5. மலைவேம்பு விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து மாதவிடாய் காலத்தில் 3 நாள் உண்ண மாதவிடாய் வலி இல்லாமல் இருக்கும். இந்த எண்ணை வெறும் வயிற்றில் நீராகரத்துடன் சாப்பிட வேண்டும். 6. பெண்கள் தங்களுடைய மாதவிடாய் நாட்களுக்கு ஒரு வாரம் முன்னர் தினசரி நாவல் பழத்தைச் சாப்பிட்டு வர மாதவிடாய் நாள் தள்ளிப் போகும் 7. பெண்கள் மாதவிடாய் காலங்களில் வயிற்று வலி ஏற்படும். அந்நாளில் எலுமிச்சம்பழச்சாறு சாப்பிட்டு வர வலி நின்று விடும். 8. வாழைப்பழம், ஏலக்காய் பொடி செய்து பிசைந்து சாப்பிட பெரும்பாடு கட்டுப்படுத்தும். 9. வல்லாரை இலை உத்தாமணி இலை நிழலில் காய வைத்து பொடியாக்கி கொள்ளவும். வெந்நீரில் 1 ஸ்பூன் கலந்து நான்கு நாட்கள் சாப்பிட வலி வராது 10. பருத்தி இலைசாறை பசும்பாலில் கலந்து பருக பெண்களுக்கு பெரும்பாடு நீங்கும். 11. தென்னமர பூக்களை உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொண்டு நாயுருவி செடியை எடுத்து சுத்தம் செய்து இரண்டையும் சேர்த்து மைபோல் அரைத்துச் சாப்பிட்டு வர இரண்டு நாட்கள் குணமாகும். 12. பருத்தி இலையை பறித்து வந்து கழுவி சுத்தம் செய்து இடித்து சாறு எடுத்து அந்தச்சாறுடன் சிறிது பசும் வெண்ணெய் கலந்து சாப்பிட்டு வர உடன் குணமாகும்.
Laddu Muttai | 19-04-2020